14.1.10

நாகூர் தர்கா - Nagoor darga

உலகப் புகழ் பெற்ற நாகூர் தர்கா தமிழகத்தில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ளது.  இது நாகூர் ஆண்டவர் என்றழைக்கப்படும் ஹஸ்ரத் மீரான் சுல்தான் சையத் சாகப்துல் ஹமீது என்றவருக்காக அர்ப்பணிக்கப்பட்டது. நபிகள் நாயகத்தின் போதனைகளை பரப்பி வந்த இவர் கி.பி 1558 ஆம் அண்டு இறந்தபோது உருவாக்கப்பட்ட சமாதியே இந்த நாகூர் தர்காவாகும்.


இது முஸ்லீம்களின் முக்கியமான புன்னிய தளமாகும். இந்த தர்கா இந்து-முஸ்லீம்களின் ஒற்றுமைக்கு பெரிய சான்றாகும். இந்த தர்கா இந்துக்களின் கட்டிடக்கலையைப் பின்பற்றி கட்டப்பட்டுள்ளது எனவும் கூறலாம். 


இது பெரும் சுற்றுச் சுவர்களால் சூழப்பட்டு, நான்கு திசைகளிலும் நுழைவுவாயில்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதன் பெரிய கோபுரம் போன்ற அமைப்பு பெரிய மினாரா என்று அழைக்கப்படுகிறது.




தங்க முலாம் பூசப்பட்ட மசூதி மூன்று சமாதிகளை உள்ளடக்கியுள்ளது. இதில் உள்ள கதவுகள் வெள்ளியால் செய்யப்பட்டது. ஒரு தங்கப் பெட்டியில் மீரான் சாகிப் பயன் படுத்திய மரச் செருப்புகள் வைக்கப்பட்டுள்ளது. இந்த மசூதிக்கு அருகில் பீர் மண்டபம் அமைந்துள்ளது.


இங்கு நடக்கும் கந்தூரி திருவிழா உலகப் பிரசித்திப் பெற்றது. இது ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் நடைபெறும். நீங்களும் செல்லலாமே!!!!!




வழி:
1) நாகப்பட்டினத்திற்கு சென்னை, வேளான்கண்ணி, தஞ்சாவூர், திருச்சி, மதுரையில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அங்கிருந்து நாகூருக்கு பேருந்து மூலம் செல்லலாம்..


2) நாகூருக்கு அருகில் திருச்சி விமான நிலையம் உள்ளது.. இங்கிருந்தும் நாகூருக்குச் செல்லலாம்.


3) நாகூருக்கு ரயில் மூலம் செல்லவேண்டும் என்று நினைத்தால், அருகில் உள்ள் நாகப்பட்டினம் , கும்பகோணம் அல்லது தஞ்சாவூர் ரயில் நிலையத்துக்கு வந்து அங்கிருந்து பேருந்தில் செல்லலாம்..


இந்த லிங்குக்கு சென்று இதன் அமைவிடத்தை தெரிந்துகொள்ளுங்கள்

2 comments:

Anonymous said...

இது ஒரு சுற்றுலாத்தளமாக இருக்கலாம்.ஆனால் இதற்கும் இஸ்லாத்திற்கும் எள் முனையளவு கூட சம்பந்தம் கிடையாது.இஸ்லாத்தின் சட்ட மூலாதாரங்களான அல்குர்ஆனிலோ,நபிகளாரின் வாழ்க்கையிலோ இதற்கு கடுகளவும் முன்மாதிரிகள் இல்லை.மாறாக இவ்வாறான தர்காக்களை கட்டி வைத்துக்கொண்டு மக்களிடம் பணம் வசூலித்து அங்கே பெரிய அற்புதங்கள் நடப்பதாகக் கூறி மக்களை ஏமாற்றுவது பெரும் பாவம் என்று அல்குர்ஆன் எச்சரிக்கிறது.
இஸ்லாத்தின் போதனைகளை சரிவரப்புரிந்து கொள்ளாத பாமர மக்கள்தான் இவ்வாறான இடங்களுக்கு சென்று தமது பணம்,நேரம்,அறிவு போன்றவற்றை இழக்கிறார்கள்.
இந்த தர்காக்களில் இருக்கும் ஹஸ்ரத்மார்களுக்கும் போலிச்சாமியார்களுக்கும் பெரிய வித்தியாசம் ஒன்று இருப்பதாக தெரியவில்லை.
ஆஸியாநியாஸ்,
காத்தான்குடி
இலங்கை.
www.abuaasiya2011@gmail.com

abuthahir said...

எங்கே அந்த ஆயத் வருகிறது சொல்ல முடியுமா? உங்கள் இஸ்டத்துக்கு குர்ஆனை வலைக்காதீர்.

அபூதாஹிர் சென்னை

Post a Comment

நிறைகளும் குறைகளும் இங்கே!!

Related Posts with Thumbnails

தமிழக சுற்றுலா

↑ Grab this Headline Animator