29.1.10

சுற்றுலாப் பொருட்காட்சி - Tourism fair

தமிழக அரசின் 36வது சுற்றுலாப் பொருட்காட்சி சென்னையில் நடைபெற்று வருகிறது. திசம்பர் 22ஆம் தேதி முதல் இந்த சுற்றுலா பொருட்காட்சியை தமிழக முதல்வர் தொடங்கி வைத்தார். இது வெற்றிகரமான 36வது சுற்றுலா -தொழில் பொருட்காட்சியாகும்.


இங்கு என்னதான் இருக்கிறது என்று கேட்கிறீர்களா?


இங்கு மத்திய மற்றும் மாநில அரசின் அரங்குகள்,  பல வகையான விளையாட்டுகள், உங்களை கவரும் வகையில் மீன் அருங்காட்சியகம்,
சாகச விளையாட்டுகள்,  உங்கள் பர்ஸை காலியாக்க வணிக வளாகம், உங்கள் வயிரை நிரப்ப ஓட்டல் தமிழ்நாடு, உங்கள் குடும்பத்தோடு பயணம் செய்ய சிறுவர் ரயில் என பல இருக்கிறது.
நீங்கள் அமர்நாத் செல்லவில்லையா? இந்த சுற்றுலா கண்காட்சிக்கு செல்லுங்கள் அமர்நாத் பனிலிங்கம் உங்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது.


கோ-கார்ட் விளையாட்டுகள், திரை இசை, நடனம், மெல்லிசை மற்றும் பல கலை நிகழ்ச்சிகளும் இங்கு உள்ளன.


நீங்களும் எடிசன் ஆகலாம். ஆம்! இங்கு உங்களுக்குள் இருக்கும் விஞ்ஞானியை கண்டுபிடிக்க, உங்கள் அறிவை ஊக்குவிக்க விஞ்ஞான தொழில் நுட்ப அரங்குகளும் உள்ளன. மேலும் பல போட்டிகளும் இங்கு நடத்தப்படுகின்றன.


இங்கு எப்படி செல்வது?


இடம்: சென்னை தீவுத்திடல்


நேரம்:
திங்கள் முதல் சனி வரை -  பகல் 3 மணி முதல் இரவு 10 மணி வரை.
ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் - காலை 11 மணி முதல் இரவு 10 மணி வரை.


1)சென்னைக்கு தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் இருந்தும் பேருந்துகளும், ரயில்களும், விமானங்களும் இயக்கப்படுகின்றன.


2)சென்னை வந்த பின்னர் மாநகர அரசுப் பேருந்துகள் தீவுத்திடலுக்கு இயக்கப்படுகின்றன.


கட்டணம்:
பெரியவர் - ரூ. 10
சிறியவர் - ரூ 5


மேலும் விபரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்.19.1.10

ஒகேனக்கல் அருவி - Hogenakkal falls

ஒகேனக்கல் அருவி கர்நாடக எல்லையில், தர்மபுரியில் இருந்து 46 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இந்தியாவின் முக்கியமான நதிகளில் ஒன்றான காவிரி இங்கு பாய்கிறது. காவிரி ஆறு கர்நாடகாவில் குடகு மலைப் பகுதியில் தோன்றி ஒகேனக்கல் வழியாக தமிழகத்திற்கு வருகிறது.


மிகவும் ரம்மியமான சூழலும், இயற்கை காட்சிகளோடும் அமைந்துள்ள இந்த அருவிக்கு நீங்களும் செல்வதற்கு முன் பல தகவல்களை இங்கு அறிந்து கொள்ளுங்கள்.


ஒகேனக்கல் என்றால் கன்னடத்தில் புகை சூழ்ந்த பாறைகள் என்று பொருள்.  ஒகே(hoge) என்றால் புகை, கல்(kal) என்றால் பாறை. தண்ணீர் விழும்போது ஏற்படும் புகை பாறைகளில் இருந்து தோன்றுவது போல் இருப்பதால் இதற்கு ஒகேனக்கல் என்ற பெயர் ஏற்பட்டது.பல இடங்களில் தண்ணீர் 20 மீ உயரத்தில் இருந்து விழுந்து சத்தத்தை ஏற்படுத்துகிறது.  இது அந்த பகுதியில் வித்தியாசமான சூழலை உருவாக்குகிறது. ஒகேனக்கலில் தண்ணீர் ஏரி போல் பல மைல்களுக்கு சூழ்ந்திருப்பதால் இங்கு பரிசல் போக்குவரத்தும் உண்டு. பல தமிழ் படங்களில் நீங்கள் கண்டது போல் நீங்களும் உல்லாசமாக பரிசலில் சென்று ஒகேனக்கலின் அழகை ரசிக்கலாம்.


நீங்களும் உங்கள் குடும்பத்தோடு சென்று அருவியில் குளிக்கலாம், அங்கு இருக்கும் மக்களிடம் எண்ணெய் தேய்த்து அருவியில் உல்லாச குளியலில் ஈடுபடலாம், அருவியில் மீன்களை பிடித்து சமைத்து விற்பவர்களிடம் மீனை வாங்கி ருசிக்கலாம்!!!!!!!!!


காவிரி ஆறு எப்போதும் இங்கு பாய்ந்து கொண்டிருப்பதால் வருடத்தில் எல்லா நாட்களும் இங்கு வரலாம். தமிழக வனத்துறையால் பராமரிக்கப்பட்டு வரும் அருகில் உள்ள் சின்ன மிருக காட்சி சாலையையும் , முதலை பண்ணையையும் பார்வையிட மறந்து விடாதீர்கள்!!!!!!!!


ஆடி மாதம் 18ஆம் நாள் , அதாவது ஆகஸ்ட் மாதத்தில், நதிக்கு திருவிழா நடத்தப்பட்டு வருகிறது....


ஒகேனக்கல் செல்வது எப்படி?
1) பெங்களுர் அல்லது சென்னை விமான நிலையம் வந்து அங்கிருந்து பேருந்து அல்லது ரயில் மூலமாக ஒகேனக்கல் வந்தடையலாம்.


2) சேலம், ஈரோடு , தர்மபுரி , பெங்களுர் போன்ற இடங்களில் இருந்து அரசு அல்லது தனியார் பேருந்துகள் மூலமாகவும் இங்கு செல்லலாம்.


3) தர்மபுரி ரயில் நிலையம் வந்து அங்கிருந்து பேருந்தில் ஒகேனக்கல் 
செல்லலாம்.


தர்மபுரி வழியாக் செல்லும் சில ரயில்கள்:
1) Ernakulam exp(2677)
2) Kongu exp(2647)
3) Coimbatore exp(1013)
4) Mysore exp(6231)
5) Tuticorin exp(6732)


இந்த பதிவு யூத்பூல் விகடனில் குட் பிளாக்ஸில் இடம் பெற்றுள்ளது.  விகடனுக்கு நன்றி.

14.1.10

நாகூர் தர்கா - Nagoor darga

உலகப் புகழ் பெற்ற நாகூர் தர்கா தமிழகத்தில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ளது.  இது நாகூர் ஆண்டவர் என்றழைக்கப்படும் ஹஸ்ரத் மீரான் சுல்தான் சையத் சாகப்துல் ஹமீது என்றவருக்காக அர்ப்பணிக்கப்பட்டது. நபிகள் நாயகத்தின் போதனைகளை பரப்பி வந்த இவர் கி.பி 1558 ஆம் அண்டு இறந்தபோது உருவாக்கப்பட்ட சமாதியே இந்த நாகூர் தர்காவாகும்.


இது முஸ்லீம்களின் முக்கியமான புன்னிய தளமாகும். இந்த தர்கா இந்து-முஸ்லீம்களின் ஒற்றுமைக்கு பெரிய சான்றாகும். இந்த தர்கா இந்துக்களின் கட்டிடக்கலையைப் பின்பற்றி கட்டப்பட்டுள்ளது எனவும் கூறலாம். 


இது பெரும் சுற்றுச் சுவர்களால் சூழப்பட்டு, நான்கு திசைகளிலும் நுழைவுவாயில்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதன் பெரிய கோபுரம் போன்ற அமைப்பு பெரிய மினாரா என்று அழைக்கப்படுகிறது.
தங்க முலாம் பூசப்பட்ட மசூதி மூன்று சமாதிகளை உள்ளடக்கியுள்ளது. இதில் உள்ள கதவுகள் வெள்ளியால் செய்யப்பட்டது. ஒரு தங்கப் பெட்டியில் மீரான் சாகிப் பயன் படுத்திய மரச் செருப்புகள் வைக்கப்பட்டுள்ளது. இந்த மசூதிக்கு அருகில் பீர் மண்டபம் அமைந்துள்ளது.


இங்கு நடக்கும் கந்தூரி திருவிழா உலகப் பிரசித்திப் பெற்றது. இது ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் நடைபெறும். நீங்களும் செல்லலாமே!!!!!
வழி:
1) நாகப்பட்டினத்திற்கு சென்னை, வேளான்கண்ணி, தஞ்சாவூர், திருச்சி, மதுரையில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அங்கிருந்து நாகூருக்கு பேருந்து மூலம் செல்லலாம்..


2) நாகூருக்கு அருகில் திருச்சி விமான நிலையம் உள்ளது.. இங்கிருந்தும் நாகூருக்குச் செல்லலாம்.


3) நாகூருக்கு ரயில் மூலம் செல்லவேண்டும் என்று நினைத்தால், அருகில் உள்ள் நாகப்பட்டினம் , கும்பகோணம் அல்லது தஞ்சாவூர் ரயில் நிலையத்துக்கு வந்து அங்கிருந்து பேருந்தில் செல்லலாம்..


இந்த லிங்குக்கு சென்று இதன் அமைவிடத்தை தெரிந்துகொள்ளுங்கள்

12.1.10

விவேகானந்தர் இல்லம் - Ice house

விவேகானந்தர் இல்லம் தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் உள்ளது. ஐஸ் ஹவுஸ் எனவும் ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிற இந்த இல்லத்தில் சுவாமி விவேகானந்தர் 1897 ஆம் ஆண்டு ஒன்பது நாட்கள் தங்கியிருந்தார். 


இந்த கட்டிடம் 1842ஆம் ஆண்டு கட்டப்பட்டது. விக்டோரிய கட்டடக் கலையைப் பின்பற்றி கட்டப்பட்டுள்ள இக்கட்டிடம் இப்போது தமிழ்நாட்டின் மிகவும் முக்கியமான சுற்றுலாத் தளமாக விளங்குகின்றது.20 திசம்பர் 1999 முதல் இந்த இல்லத்தில் நிரந்திரமாக ஒரு கண்காட்சி, விவேகானந்தரை பற்றியும் இந்திய கலாச்சாரத்தைப் பற்றியும் ராமகிருஷ்ண மடத்தினால் தொடங்கப்பட்டு இன்று வரை வெற்றிகரமாக நடந்துவருகிறது!!!

மேலும் இங்கு யோகாசன வகுப்புகளும், தியான வகுப்புகளும், இளைஞர் சந்திப்புகளும் நடத்தப்பட்டு வருகின்றன..


கண்காட்சி மற்றும் இல்லம் திறந்திருக்கும் நேரம்:
காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை.

அரசு விடுமுறை நாட்களில் செயல்படாது.


இடம்:
kamarajar salai,
triplicane,
chennai.

10.1.10

தஞ்சை பெரிய கோவில் - Thanjavur temple

தஞ்சை பெருவுடையார் கோவில் அல்லது பிரகதீசுவரர் ஆலயம் அல்லது தஞ்சை பெரிய கோவில் உலக பாரம்பரிய சின்னமாகும். இக்கோவில் 10ஆம் நூற்றாண்டில் இராஜராஜ சோழனால் கட்டப்பட்டது.


தமிழகத்தின் மிகவும் பிரபலமான சுற்றுலாத் தளமான இது 1987ஆம் ஆண்டு UNESCOவால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது.


1006 ஆம் ஆண்டு கட்டத் தொடங்கி 1010ஆம் ஆண்டு முடிக்கப்பட்ட இந்த கோவிலுக்கு இந்த ஆண்டு 1000 வயது பூர்த்தியாகின்றது.

முக்கியமான கட்டடம் 150 அடி நீளத்துடன் கட்டப்பட்டது.  கோயிலின் பிரம்மாண்டமான விமானம் கூர்நுனிக் கோபுரமாக அமைந்து கர்ப்பக்கிரகத்திலிருந்து 190அடி உயரத்துடன் கட்டப்பட்டுள்ளது.


இந்த கோயில் தமிழரின் கலைத்திறமையையும், பாரம்பரியத்தையும் உலகிற்கு சொல்கிறது.


இது 35 உட்கோயில்களை கொண்டது. நான்கு திசைகளிலும் பல இடைவெளிகளுக்கு நடுவே இந்த உட்கோயில்கள் உள்ளன. முக்கிய விமானம் உத்தம் வகையைச் சார்ந்தது. இதை தமிழில் மாடக்கோயில் என்றும் கூறுவதுண்டு.


இக்கோயிலின் கட்டிடக்கலை, சோழர்காலக் கட்டிடக்கலைக்கு நல்ல எடுத்துக்காட்டாகும். இந்த கோயிலில் உள்ள நந்தி ஒரே கல்லால் செய்யப்பட்டது.  இந்த நந்தி 14 மீ உயரம், 7 மீ நீளம், 3 மீ அகலம் கொண்டது.


இக்கோயிலின் சிறப்பு அம்சம் என்னவென்றால் இக்கோயில் கோபுரத்தின் நிழல் எப்போதும் கீழே விழுவதே இல்லை என்பதாகும்!!!!
தஞ்சாவூர் வழியாக செல்லும் ரயில்கள்:
1) Janshatabdi express
2) Rockfort express
3) Mysore - Mayiladuthurai express


மேலும் தஞ்சாவூர் செல்ல சென்னை மற்றும் கும்பகோணத்தில் இருந்து அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.வணக்கம் வாசகர்களே!!!!

வணக்கம்!.


இந்த வலையில் நாம் தமிழகத்தின் சுற்றுலாத் தளங்களை பற்றி பார்க்கலாம்.
உங்கள் கருத்துகளுக்காக காத்திருக்கிறேன்..........


உங்கள் ,
தமிழ் மகன்
Related Posts with Thumbnails

தமிழக சுற்றுலா

↑ Grab this Headline Animator