போன பதிவின் தொடர்ச்சியை இந்த இடுகையிலும் காண்போம். இந்த இடுகையும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்.
1) சுற்றுலாத் துறையும் நமது சுற்றுலாவில் பங்கெடுக்கிறது என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. சுற்றுலாத் தளங்களைப் பற்றி தெரிந்து கொள்ள நாம் தமிழக சுற்றுலாத் துறையின் இணைய தளத்தை அணுகலாம். இந்த தளத்தில் பிரபலாமான சுற்றுலாத் தளங்களைப் வீட்டில் இருந்தே பார்வையிட வசதியாக virtual tour என்னும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த தளத்தில் நமக்குத் தேவையான அனைத்து தகவல்கள், அரசின் சுற்றுலா தொடர்பான சேவைகள் ஆகியவற்றையும் அறிந்து கொள்ளலாம்.
2) சரி. நாம் பெரும்பாலும் நமக்குப் பழக்கப்படாத இடங்களுக்கே சுற்றுலா செல்வோம். அது மாதிரியான நேரங்களில் அங்கு இருக்கும் நண்பர்களிடமும், உறவினர்களிடமும் அந்த இடத்தைப் பற்றி கேட்டறிய வேண்டும். அப்படி யாரும் இல்லையென்றால் மேலே சொன்னது போல பல இணைய தளங்கள் நமக்கு உதவ காத்திருக்கின்றன. இது போன்று அறிந்து கொள்வதால் அந்த இடத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளமுடியும், சுற்றுலாவும் சுவாரசியமானதாக இருக்கும்.
3) அப்புறம் நீங்கள் அடிக்கடி கேள்விப்பட்ட ஒன்று, ரயிலில் சென்றால் மற்றவர்கள் கொடுக்கும் உணவுப் பொருட்களை உண்ணாதீர்கள். முக்கியாமாக பிஸ்கெட் போன்றவற்றை தவிர்த்து விடுங்கள். இப்போது திருடர்கள் வேறு ஏதாவது வழியைக் கண்டுபிடித்திருப்பார்கள். இருந்தாலும் முன்னெச்சரிக்கையாக இருங்கள். வருமுன் காப்போம்.
4) ஜாக்கிரதை - சில சுற்றுலாத் தளங்களில் உங்களை மகிழ்விக்க சில அபாயகரமான(த்ரில்லான) விளையாட்டுகள் இருக்கும். உதாரணமாக paragliding, motorboat, roller coster போன்றவை. இது போன்றவைகளில் ஈடுபடவேண்டாம் என்று கூறவில்லை, கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்கள் - உயிர் மேல் ஆசையிருந்தால்.
5) சரணாலயங்கள், வனவிலங்கு பூங்காக்களும் நம் சுற்றுலாவில் இடம்பெற வாய்ப்புண்டு. அது போன்ற இடங்களுக்கு செல்லும் போது விலங்குகளிடம் உங்கள் குறும்பை காட்டாதீர்கள். அவையும் உயிரினங்கள் தான், பேச முடியா உயிரினங்கள். அழிவில் இருக்கும் பல விலங்குகள் சரணாலயங்களில்தான் பெரிதும் காணப்படுகின்றன. பல வேலைகளுக்காக அவைகளைச் சார்ந்திருக்கும் நாம் அவற்றைப் பாதுகாக்கவும் வேண்டும்
முக்கிய்மாக சுற்றுலாத் தளங்களை தூய்மையாக வைத்திருக்க உதவுங்கள், உங்கள் ஓட்டையும் எனக்காக பதிவு செய்யுங்கள்.
.
9.3.10
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
1898இல் நான் முதல்முதல் சென்ற ஞாபகம் வந்தது! மறக்கமுடியாத அருமையான இடம். இன்னும் பல படங்களைச் சேர்க்கலாமே! நன்றியும் வாழ்த்துக்களும்!
Post a Comment
நிறைகளும் குறைகளும் இங்கே!!