25.4.10

ஊட்டி-மலைகளின் அரசி- Ooty - Udhagamandalam. பகுதி - 2போன பதிவின் தொடர்ச்சி...


Deer Park:
ஊட்டியில் உள்ள ஏரி பூங்கா அருகில் அமைந்துள்ளது இந்த மான் பூங்கா.  இந்தியாவில் மிக உயரத்தில் அமைந்திருக்கும் பல பூங்காக்களில் இந்த பூங்காவும் ஒன்று.  ஊட்டியின் அருமையான வானிலையில் வனவிலங்குகளை காண இந்த பூங்கா பெரிதும் உதவியாய் இருக்கிறது.  1986 ஆம் ஆண்டு மொத்தம் 22 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்பட்ட இந்த பூங்காவில் 6 ஏக்கர் நிலம் பொதுமக்கள் பார்வைக்காக ஒதுக்கப்பட்டது.  தமிழக வனத்துறையால் பராமரிக்கப்பட்டு வரும் இந்த பூங்கா ஊட்டியில் இருக்கும் சில முக்கியமான சுற்றுலாத் தளங்களில் ஒன்று.


Boat House:
ஊட்டியின் பிரதான ஏரியில் இந்த படகு இல்லம் அமைந்துள்ளது. ஜான் சுலிவன் என்பவரால் உருவாக்கபட்ட இந்த ஏரி 4 சதுர கி.மீ அளவு கொண்டது. இந்த ஏரிக்கு அருகில் ஊட்டியின் புகழ்மிக்க குதிரை பந்தயம் நடக்கும் இடமான ரேஸ் கோர்ஸும் அமைந்துள்ளது. இரண்டு பேர் செல்லக்கூடிய படகுகள்,  குடும்பத்தோடு செல்ல படகுகள் என பலவகையான படகுகள் இங்கு இருக்கின்றன.  தமிழக சுற்றுலாத் துறையால் உருவாக்கப்பட்ட இந்த படகு இல்லத்தில் படகுகள் மூலம் ஏரியின் அழகையும், இயற்கை வளங்களையும் கண்டு களிக்கலாம்.


Government Museum:
ஊட்டியில் இருந்து மைசூர் செல்லும் சாலையில் அமைந்துள்ளது இந்த அருங்காட்சியகம். ஊட்டியில் முன்னர் தோடா இனத்தை சேர்ந்த பழங்குடி மக்கள் வாழ்ந்து வந்தனர். அவர்கள் பயன்படுத்திய பல்வேறு வகையான பொருட்கள் இந்த அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் நீலகிரி மாவட்டத்தை பற்றிய செய்திகள்,  நீலகிரி மாவட்டத்திக்கு தொடர்புடைய சிற்பங்கள் மற்றும் மேலும் பல கலைப்பொருட்களும் இங்கு அணிவகுக்கின்றன.  மேலும் ஊட்டியில் இருந்து மைசூர் செல்லும் சாலையில் 2 கி.மீ தொலைவில் லலித் கலா அகாடமியும் அமைந்துள்ளது.  இந்த அகாடமியில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களின் கலைப்பொருட்களும் ஓவியங்களும் இடம்பெற்றுள்ளன.


Railway Station:
நீலகிரி மலை ரயில் unescoவால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது.  இந்த ரயில் ஊட்டியின் கரடுமுரடான மலைப்பாதையில் கம்பீரத்துடன் செல்கிறது. இந்த ரயிலில் செல்வதன் மூலம் ஊட்டியில் ரம்மியமான வானிலையையும்,  ஊட்டி மலையின் அழகையும் ரசிக்கலாம். கிட்டத்தட்ட 5 மணி நேர பயணம் மூலம் ஊட்டியை அடையலாம்.


மேலும் பார்க்ககூடிய இடங்கள் :  St, Stephen Church, Wax world(பார்க்க - மெலுகால் ஆன காந்தி படம்), கோல்ப் மைதானம்.


எப்படி செல்வது?
1)ஊட்டிக்கு சென்னை, மேட்டுப்பாளயம், பெங்களூரு, மைசூர் போன்ற இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன.


2)ஊட்டியில் ரயில் நிலையம் உள்ளது. மேலும் விபரங்கள்(1) மேலும் விபரங்கள்(2)


3)அருகில் உள்ள விமான நிலையம் - கோயம்பத்தூர் 105 கி.மீ தொலைவில்


.

2 comments:

ஸ்ரீ.... said...

உபயோகமான தகவல்கள். உங்களுக்குப் படங்கள் தேவையென்றால் எனது வலைப்பூவிலுள்ள படங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஸ்ரீ....

மரா said...

சூப்பர் பதிவு. நானும் ஊட்டியில் இரண்டு ஆண்டுகள் படகு இல்லத்தில் இருந்திருக்கிறேன்.நல்லா எழுதியிருக்கிறீங்க.

Post a Comment

நிறைகளும் குறைகளும் இங்கே!!

Related Posts with Thumbnails

தமிழக சுற்றுலா

↑ Grab this Headline Animator