.
.
2.5.10
மெரினா கடற்கரை - Marina Beach
மெரினா கடற்கரை சென்னையில் வங்காள விரிகுடாவில் அமைந்துள்ளது. இந்த கடற்கரை கிட்டத்தட்ட 12 கி.மீ நீளம் உடையது. உலகிலேயே மிக நீளமான கடற்கரைகளில் இதுவும் ஒன்று.
சென்னைக்கு வரும் பெரும்பாலான சுற்றுலாப் பயணிகளின் பொழுதுபோக்கும் இடமாக திகழ்கிறது இந்த மெரினா கடற்கரை. இந்த கடற்கரை தண்ணீரிக்கு பிரபலமோ இல்லையோ உணவுப் பொருட்களுக்கு மிகவும் பிரபலம். தேங்காய் சுண்டல், ஏலக்காய் டீ, பஜ்ஜி, பேல் பூரி போன்ற சாட் வகைகள் இங்கு ஒரு பிடி பிடிக்கலாம். என்னதான் குளிப்பது தடை செய்யப்பட்டிருந்தாலும் ஏராளமானோர் இன்றுவரை குளித்துக்கொண்டுதான் இருக்கின்றனர்.
சென்னை மாநகராட்சி 2008 ஆம் ஆண்டில் கடற்கரை சீர்சிருத்தும் பணியை மேற்கொண்டு பல கோடிகள் செலவிட்டு கடற்கரையை அழகுபடுத்தியிருக்கிறது. ஸ்கேடிங் செய்ய வசதியாக காந்தி சிலைக்கு பின்னால் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 2005ஆம் ஆண்டு ஒன்றரை கோடி செலவில் மெரினா கடற்கரையோரம் பெரிய நீர்விழ்ச்சி ஒன்றும் அமைக்கப்பட்டது.
இரண்டாம் உலகத் தமிழ மாநாட்டிற்கு பின்னர் கடற்கரையோரம் ஆங்காங்கே தமிழுக்குத் தொண்டாற்றிய புலவர்களின் சிலைகள் நிறுவப்பட்டது.
கடற்கரையோரம் உள்ள சிலைகள் : உழைப்பாளர் சிலை, காந்தி சிலை, திருவள்ளுவர், அவ்வையார், கண்ணகி, கம்பர், வீரமாமுனிவர், ஜி.யு.போப், கால்டுவெல், வ.உ.சிதம்பரனார், பாரதியார், பாரதிதாசன், சுபாஷ் சந்திர போஸ், அன்னி பெஸண்ட், காமராஜர், பெரியார், சிவாஜி போன்ற பல சிலைகளை காணலாம்.
தமிழகத்தின் முன்னாள் முதல்வர்களான் எம்.ஜி.ஆர், சி.என்.அண்ணாதுரை ஆகியோரை பெருமைப்படுத்தும் வகையில் கடற்கரையோரம் இருவரின் சமாதியும் அருகருகே அமைக்கப்பட்டுள்ளது.
காந்தி சிலைக்கு அருகில் கலங்கரை விளக்கமும், கடற்கரைக்கு அருகில் மீன் அருங்காட்சியாகமும், மெரினா நீச்சல் குளமும் அமைந்துள்ளது. அவ்வப்போது கடலில் இருந்து இனப்பெருக்கம் செய்ய வெளியே வரும் ஆலிவ் ரிட்லீக்களை பாதுகாக்கவும் குழுக்கள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதையும் காணலாம்.
காலையில் நடைபயிற்சி செய்பவர்கள், சிரிப்பவர்கள்(laughers club), மாலையில் காதலர்கள், சிறுவர்கள் என பெரியவர் முதல் சிறியவர் வரை பல பேர் இங்கு வந்து செல்கின்றனர்.
எப்படி செல்வது?
சென்னை மாநகராட்சி பேருந்துகள் மூலம் மெரினா கடற்கரைக்கு செல்லலாம்.
1)சென்னைக்கு பல பேருந்துகள் உண்டு
2)சென்னையில் பல ரயில் நிலையங்கள் உள்ளன.
3)சென்னையில் விமான நிலையமும் உண்டு

Subscribe to:
Posts (Atom)