வாசகர்கள் அனைவருக்கும் எனது இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த சித்திரைத் திருநாளில் தமிழை நிலைநாட்டிய , தமிழுக்குப் பெருமை சேர்த்த வள்ளுவரைப் பற்றி இந்த பதிவை எழுதுவதில் நான் பெருமைகொள்கிறேன். அந்தப் புலவரை பெருமைப்படுத்த வங்காள விரிகுடாவும், இந்தியப் பெருங்கடலும், அரபிக் கடலும் சங்கமிக்கும் இந்தியாவின் தென்கோடி முனையான கன்னியாகுமரியில் சுனாமியையும் தாக்குப்பிடிக்கும் பலத்தோடு எழுப்பப்பட்ட 133 அடி உயர சிலையை உருவாக்கி தனக்கு பெருமை தேடிக்கொண்டார் தமிழக முதல்வர்.
எத்தனையோ வரலாற்று சிறப்புமிக்க புலவர்களின் வரலாற்றை நமது ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தாலும், தமிழுக்கு தன் இரண்டடி குறளால் புகழைத் தேடித்தந்த திருவள்ளுவரின் வரலாற்றை கண்டுபிடிக்கமுடியவில்லை. குத்துமதிப்பாக திருவள்ளுவர் வாழ்ந்த காலம் கி.மு 31ஆம் நூற்றாண்டு என கண்டறிந்துள்ளனர். இருந்தாலும் சிலர் கி.பி இரண்டாம் நூற்றாண்டு எனவும் சிலர் கூறுகின்றனர். இவர் எழுதிய திருக்குறள் அனைவருக்கும் பொருந்துவதால், இவர் எந்த சமயத்தைச் சார்ந்தவர் என்றும் கணிக்கமுடியவில்லை. அவர் வரலாற்றை அறிய முடியவில்லை என்றாலும் அவரைப் பெருமைப்படுத்ததுவில் பல நாடுகளும் பங்கெடுத்துள்ளன, அதில் தமிழகம் முன்னோடியாக திகழ்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு - பாரதியார்
1, ஜனவரி, 2000 அன்று தற்போதைய தமிழக முதல்வர் கலைஞரின் யோசனையால் உருவாகிய திருவள்ளுவர் சிலை திறந்துவைக்கப்பட்டது. திருக்குறளின் 133 அதிகாரங்களை குறிக்கும் வகையில் 133 அடி உயரம் கொண்டது இந்த சிலை. சிலையைத் தாங்கும் பீடம் மட்டும் 38 அடி, சிலை 95 அடி என மொத்தம் 133 அடி உயரம். இந்த 38 அடி உயர பீடம் அறத்துப்பாலின் 38 அதிகாரங்களையும், 95 அடி உயர் சிலை பொருட்பால் மற்றும் இன்பத்துப்பாலின் 95 அதிகாரங்களையும் குறிக்கிறது. அதாவது அறத்தை அடித்தளமாக கொண்டே பொருளும் இன்பமும் அமையவேண்டும் என்ற வாழ்க்கைத் தத்துவத்தை உணர்த்தும் வகையில் இந்த சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.
1979 ஆம் ஆண்டு, அன்றைய பாரதப் பிரதமர் மொராஜி தேசாயால் அடிக்கல் நாட்டப்பட்டு பல அரசியல் பிரச்சனைகளால் தடைபட்ட கட்டுமானப் பணி 1990ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்கப்பட்டு 5000க்கும் மேற்பட்ட சிற்பக்கலைஞர்களால் தமிழகத்தின் மிகச்சிறந்த கணபதி ஸ்தபதியின் மேற்பார்வையில் கட்டுமானப்பணி தொடங்கப்பட்டு 1999ஆம் நிறைவு பெற்றது. இதற்காக சிறுதாமூர் , பட்டுமலைக்குப்பம், அம்பாசமுத்திரம் போன்ற பகுதியில் உள்ள மலைகளில் இருந்து கற்கள் எடுத்துவரப்பட்டு சிலை உருவாக்கப்பட்டது. இந்த சிலையின் மொத்த எடை 7000 டன். தமிழகத்தைப் பொறுத்தவரை கோயில்கள், சிலைகள் போன்றவறை என்றுமே பெரிதாக, பிரமாண்டமாக உருவாக்கப்படுவது உண்டு. அதைப் போலவே திருவள்ளுவர் சிலையும் முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமாரியில் கம்பீரத்துடன் பிரமாண்டமாய் காட்சியளிக்கிறது. நடுக்கடலில் ஒரு சிறிய தீவில் இந்த சிலை அமைந்துள்ளமையால் இந்த சிலையை அருகில் சென்று காண சுற்றுலாத் துறையின் மூலம் படகுகள் இயக்கப்படுகின்றன. பல நாட்கள் வானிலை மாற்றங்களால் படகு போக்குவரத்து நிறுத்தப்படுவதும் உண்டு. சில நாட்களுக்கு முன் கூட ஊழியர்களின் போரட்டத்தால் நிறுத்தப்பட்டது.
வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே - பாரதிதாசன்
கணபதி ஸ்தபதியின் திறமையாலும் அனுபவத்தாலும் சிலையின் இடுப்பு பகுதியில் உள்ள சிறிய வலைவு மிகச் சிறப்பாக செதுக்கப்பட்டுள்ளது. மேலும் எத்தகைய பூகம்பம் ஏற்பட்டாலும் தாங்கும் வகையில் செதுக்கப்பட்டமையால் சுனாமியின் தாக்கத்தையும் எதிர்த்து இன்று வரை நிலையாய் இருக்கிறது. இந்த சிலையை நீங்களும் கண்டு களிக்கலாமே. (சிலையின் பீடம் உயரம் கூட இருக்கமாட்டீர்கள்...)
எப்படி செல்வது?
1)கன்னியாகுமரிக்கு தமிழகத்தின் பல இடங்களில் இருந்து பேருந்துகள் உண்டு.
2)கன்னியாகுமரியில் ரயில் நிலையம் உண்டு. மேலும் விபரங்கள்
3)அருகில் உள்ள விமான நிலையம் - திருவனந்தபுரம் 80 கி.மீ தொலைவில்.
அங்கு சென்ற பின் சுற்றுலாத் துறையின் படகுகள் மூலம் சிலைக்குச் செல்லலாம்.
நேரம்: காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை.
.
Showing posts with label சிற்பக்கலை. Show all posts

14.4.10
1.4.10
திருச்சி மலைக் கோட்டை - Rock fort,Trichy
திருச்சி மலைக் கோட்டை , திருச்சிராப்பள்ளியின் அடையாளமாகவே விளங்குகிறது. ஒரு மலையைச் சுற்றி கோட்டை அமைந்துள்ளதால் மலைக் கோட்டை என்று அழைக்கப்படும் இது காவிரி ஆற்றின் தென்கரையோரம் அழகிய தோற்றத்துடன் கம்பீரமாய் காட்சியளிக்கிறது. திருச்சி பல இடங்களில் இருந்து இந்தக் கோட்டையின் அழகை கண்டுகளிக்கலாம்.
இந்த மலையில் மொத்தம் மூன்று கோவில்கள் உள்ளன. மலையின் கீழே ஒரு கோவில், நடுவே ஒரு கோவில், உச்சியில் ஒரு கோவில் என மூன்று பிரசித்தி பெற்ற கோவில்கள் உள்ளன. மலை அடிவாரத்தில் மாணிக்க விநாயகர் கோவில், நடுவில் தாயுமானவர் கோவில், மலை உச்சியில் உச்சிப்பிள்ளையார் கோவில் என்பதே அந்த மூன்று கோவில்களாகும். பல்லவர்கள் காலத்தில் தான் இந்தக் கோவில்கள் கட்டப்பட்டது, இங்கு உள்ள கோட்டை நாயக்கர்கள் காலத்தில் கட்டப்பட்டது. இந்த மூன்றைத் தவிர பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட குடவரை கோவிலும், பாண்டியர் காலத்தில் கட்டப்பட்ட குடவரை கோவிலும் உள்ளன. பெரிய மலைகளை குடைந்து அமைக்கப்பட்ட கோவில்களே குடவரைக்கோவில்கள் எனப்படும்.
இந்த மலை மொத்தம் 83 மீ உயரம் கொண்டது, மிகவும் பழமை வாய்ந்தது. ஆராய்ச்சியாளர்களின் கண்டுபிடிப்புகளின் படி இந்த மலை 3.8 மில்லியன் வருடங்கள் பழமையானது என்று கண்டுபிடிக்கப் பட்டிருக்கிறது. இந்தியாவின் வடக்கே இருக்கும் இமாலய மலையைவிட அதிக பழமையானது. குவார்ட்ஸ், பெல்ஸ்பார் போன்ற அரிய வகை தாதுக்கள் இந்த மலையில் கிடைக்கின்றன. உலகத்திலேயே சுற்றுலா இடமாக கருதப்படும் மலைகளில் இதுவே மிக உயரமானதாகவும், பெரிதாகவும் கருதப்படுகிறது.
இந்த மலையின் உச்சியில் இருக்கும் உச்சிப் பிள்ளையாரைச் சந்திக்க மொத்தம் 437 படிகளைக் கடக்க வேண்டும். மூச்சிறைக்க ஏறிய பின் உச்சிப் பிள்ளையார் கோவிலில் இருந்து திருச்சியின் அழகையும், காவிரி ஆற்றையும் கண்டு களிக்கலாம். மிகப் பிரபலமான இந்தப் பிள்ளையார் கோவிலில், விநாயகர் சதுர்த்தி அன்று மிகப் பெரிய கொலுக்கட்டை படைக்கப்படுவதுண்டு. மேலும் இங்கு உள்ள மிகப் பெரிய தாயுமானசுவாமி கோவிலில் இருக்கும் கடவுளுக்கு மாத்ருபூதேஸ்வரர் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இங்கு இருக்கும் சிவலிங்கம், இந்த மலையினாலேயே ஆனது. இந்தக் கோவிலுக்கு கீழே அமைந்துள்ள இரண்டு பல்லவர் கால குடவரைக் கோவில்களில் 6ஆம் , 7ஆம் நூற்றாண்டு சிற்பங்கள் காணப்படுகின்றன. மலை அடிவாரத்தில் குளமும் அமைந்துள்ளது.
17ஆம் நூற்றாண்டில் நடுப்பகுதியில் கட்டப்பட்ட அரண்மனை ஒன்றும் மலை அடிவாரத்தில் காணப்படுகிறது. இப்போது அந்த அரண்மனை ராணி மங்கம்மாள் மஹால் என்று அழைக்கப்டுகிறது. இந்த அரண்மனை சொக்கநாத நாயக்கரால் கட்டப்பட்டது. சில காலம் மதுரையை ஆண்ட நாயக்கர்களால் அரசவையாகவும் பயன்படுத்தப்பட்டது. இப்போது இந்த அரண்மனை அரசு அருங்காட்சியமாக செயல்படுகிறது.
மலை, கோட்டை, குளம், அரண்மனை, கோவில்கள் என இவை அனைத்தையும் ஒருங்கினைக்கும் வகையில் மேற்குப் பகுதியில் ஒரு பெரிய கதவு ஒன்றும் உள்ளது.
இந்தக் கோட்டை பல வரலாற்று நிகழ்வுகளைச் சந்தித்திருக்கிறது. இந்தக் கோட்டை நாயக்கர்கள், பிஜப்பூர், கர்னாடக மற்றும் மராட்டிய படைகளின் போரை கண்டு களித்திருக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக நம்மை அடிமைப்படுத்திய ஆங்கிலேயருக்கும் உதவியாக இருந்துள்ளது. இது போன்று நாயக்கர்கள் காலத்திலும், நவாப்கள் காலத்திலும், ஆங்கிலேயர் ஆட்சியிலும் பல போர்களில் இந்தக் கோட்டையும் பங்கெடுத்துள்ளது.
இங்குள்ள கோவில்களில் சித்திரை மாதத்தில் பிரமோத்சவமும், ஆடிபூர விழாவும், பங்குனி மாதத்தில் தெப்பத் திருவிழாவும் வெகுசிறப்பாக நடைபெறும். நீங்களும் சென்று கண்டு மகிழுங்கள்..
அருங்காட்சியக நேரம்:
காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை மற்றும் மதியம் 2 மணி முதல் 5 மணி வரை.
திங்கட்கிழமைகள் மற்றும் அரசு விடுமுறை நாட்களில் செயல்படாது.
எப்படி செல்வது?
1) திருச்சிக்கு சென்னை, மதுரை, கோவை போன்ற பல இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
2) திருச்சியில் விமான நிலையமும், ரயில் நிலையமும் உள்ளது.
.
18.3.10
மகாபலிபுரம் பாகம் 2 - Mahabalipuram 2
போன பதிவின் தொடர்ச்சி...
வாங்க! நல்லா சாப்டீங்களா?
சாப்பிட்டாச்சு! இப்ப என்ன பார்க்கப் போறோம்!
கடற்கரைக் கோயிலுக்கு போலாம், வாங்க!
இந்த கடற்கரைக் கோயில் திராவிடக் கட்டடக் கலையை பின்பற்றி கட்டப்பட்டிருக்கு. பாருங்க கடல் அலை எவ்ளோ சீற்றத்தோட இருக்கு. இந்தக் கோயிலைச் சுற்றி கற்களால் ஆன காளை மாடுகள் கோயிலுக்கு அரண் போல இருக்கு.
சரி! இந்தக் கோயிலை யார் கட்டியது?
ஏழாம் நூற்றாண்டில் ராஜசிம்மன் என்ற மன்னன் தான் இந்தக் கோயிலைக் கட்டினார்.
மேல சொல்லுங்க!

இந்தக் கோயிலின் விமானம் மட்டும் 60 அடி உயரம் இருக்குது.
கிரேன் போன்ற இயந்திரங்களின் உதவியே இல்லாத காலத்தில எப்படிதான் கல்ல அவ்வளவு உயரத்துல தூக்கி வச்சாங்களோ!!!
ஆமா! அது பெரிய ஆச்சரியம்தான். கற்களை சாரம் கட்டி தூக்கி வச்சதா சொல்றாங்க. இந்தக் கோவில்ல சிவனும் விஷ்ணுவும் நமக்கு காட்சிதர்ராங்க. சுவர் முழுவதும் நந்தி உருவத்தை செதுக்கி இருக்காங்க. இந்தக் கோவிலோட சிறப்பே இங்கு செதுக்கப்பட்ட சிற்பங்கள்தான். சாமி கும்பிட்டது போதும்! வாங்க அடுத்த இடத்துக்கு போலாம்..
சரி, சரி அடுத்து எங்க?
வராக குகைக் கோயிலுக்கு போலாம். குகை போன்று இருப்பதால இதுக்கு குகைகோயில்னு பேர் வச்சிருக்காங்க. இந்தக் கோவிலின் உள்ளே விஷ்ணுவின் வராக அவதாரத்தை சித்தரிக்கும் வகையில் சிற்பங்கள் அமைந்திருக்கின்றன.
மகாபலிபுரத்தில் ஒரே ஒரு குகைக்கோவில்தான் இருக்கா?
மொத்தம் 13 குகைக்கோயில்கள் இருக்கு. இந்தக் கோவில் காலத்தால் சிறப்பு வாய்ந்தது. கோனேரி மண்டபம், மஹிசாசுரமர்த்தினி குகை, வராக மண்டபம், ஆதிவராஹ திருமுர்த்தி குகை மற்றும் கிருஷ்ண மண்டபம் போன்ற பல குகைக் கோயில்கள் இருக்குது.
வாங்க மஹிசாசுர மர்த்தினி குகைக்கோயிலுக்கு போகலாம்.
இந்தக் கோயிலில் மஹிசாசுர மர்த்தினி மகிஷனை வதம் செய்யும் காட்சி ஒரு பக்கமும் பகவான் விஷ்ணு பள்ளி கொண்டிருக்கும் காட்சி இன்னொரு பக்கமும் செதுக்கப்பட்டிருக்கு. பாத்துட்டீங்களா?
நடந்து நடந்து கால் வலிக்குதுப்பா! சரி அடுத்த இடத்துக்கு போலாம்.
உங்களுக்கு வெண்ணெய்னா பிடிக்குமா?
ஏதோ கொஞ்சம் சாப்பிடுவேன்.
இதோ பாருங்க இதுதான் கிருஷ்ணரின் வெண்ணெய் உருண்டை. தள்ளுனா உருண்டுடும்னு பயப்படாதீங்க. உங்களால ஒரு துளி கூட தள்ளமுடியாது. இந்தப் கல் பாறை எந்த பிடிப்பும் இல்லாமல் நிற்கிறது. இந்த வெண்ணெயையும் கொஞ்சம் சாப்பிடுங்க.
இருங்க சார்! உருண்டையை தள்ளுற மாதிரி போட்டோ எடுத்துக்குறேன்.
எடுத்தாச்சா? வாங்க புலிக்குகைக்கு போலாம்.
புலிக்குகையா! புலினா எனக்கு பயம். நா வல்லப்பா. ஆள விடுங்க..
புலியெல்லாம் இருக்காது.. பேருதான் புலிக்குகை.

அப்படியா? அப்படின்னா போலாம். வாங்க.
இந்தக் குகை பல்லவர் கால கலாச்சார நிகழ்வுகள் நடப்பதற்காக் திறந்தவெளி அரங்கமா உருவாக்கியிருக்காங்க. பல பழைமையான சிற்பங்களும் இங்கு இருக்கு. போய் பாத்துட்டு வாங்க.
சரி, மகாபலிபுரத்தோட பிரபலமான சுற்றுலாத் தளங்களையெல்லாம் சுத்திக் காண்பிச்சாச்சு. மகாபலிபுரம் எப்படி இருக்கு.
அருமையா இருக்கு, கற்களில் கலை நயத்தை கண்டது என்னை மகிழ்ச்சியடையச் செய்கிறது. எப்படியோ ஒரு வழியா பல்லவர்களோட சிற்பக்கலையையும், ரசனையையும் அறிஞ்சுக்கிட்டேன்.சுத்திக் காமிச்சதுக்கு ரொம்ப நன்றி. உங்களுக்கு எவ்ளோ பணம் குடுக்கணும்.
பணம் எல்லாம் வேண்டாம். என் நண்பன் தமிழக சுற்றுலான்னு வலைப்பதிவு எழுதுறான்,
முடிஞ்சா வலைப்பதிவை போய் பாருங்க. பிடிச்சுருந்தா அதுல பின்னூட்டம் போடுங்க.. அதுவே போதும்.
ரொம்ப நன்றி தம்பி. போயிட்டுவர்ரேன்.
என்ன மாமல்லபுரத்தைப் பற்றி தெரிந்துகொண்டீர்களா. அவர் சொன்னது போல மறக்காமல் பின்னூட்டம் போடுங்க..
குறிப்பு : இந்த இடங்கள் அனைத்தும் மாமல்லபுரத்தில் உள்ளது. ஒவ்வொரு இடமும் மற்ற இடங்களில் இருந்து சிறிது தொலைவில் உள்ளது.
எப்படி செல்வது என்றுதானே கேட்கீறீர்கள்?
1)மகாபலிபுரத்துக்கு சென்னை, காஞ்சிபுரம், பாண்டிச்சேரி போன்ற பல இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
2)அருகில் உள்ள ரயில் நிலையம் : செங்கல்பட்டு 29 கி.மீ தொலைவில்
3)அருகில் உள்ள விமான நிலையம் : சென்னை 58 கி.மீ தொலைவில்
Tourist Office in Mamallapuram:
Kancheepuram District,
Mamallapuram - 603 104.
Ph: 04114 - 242232.
திசம்பர் - ஜனவரி மாதங்களில் இங்கு நாட்டியத் திருவிழாவும் நடைபெறும். கிளம்புங்க மாமல்லபுரத்துக்கு...
.
வாங்க! நல்லா சாப்டீங்களா?
சாப்பிட்டாச்சு! இப்ப என்ன பார்க்கப் போறோம்!
கடற்கரைக் கோயிலுக்கு போலாம், வாங்க!
இந்த கடற்கரைக் கோயில் திராவிடக் கட்டடக் கலையை பின்பற்றி கட்டப்பட்டிருக்கு. பாருங்க கடல் அலை எவ்ளோ சீற்றத்தோட இருக்கு. இந்தக் கோயிலைச் சுற்றி கற்களால் ஆன காளை மாடுகள் கோயிலுக்கு அரண் போல இருக்கு.
சரி! இந்தக் கோயிலை யார் கட்டியது?
ஏழாம் நூற்றாண்டில் ராஜசிம்மன் என்ற மன்னன் தான் இந்தக் கோயிலைக் கட்டினார்.
மேல சொல்லுங்க!

இந்தக் கோயிலின் விமானம் மட்டும் 60 அடி உயரம் இருக்குது.
கிரேன் போன்ற இயந்திரங்களின் உதவியே இல்லாத காலத்தில எப்படிதான் கல்ல அவ்வளவு உயரத்துல தூக்கி வச்சாங்களோ!!!ஆமா! அது பெரிய ஆச்சரியம்தான். கற்களை சாரம் கட்டி தூக்கி வச்சதா சொல்றாங்க. இந்தக் கோவில்ல சிவனும் விஷ்ணுவும் நமக்கு காட்சிதர்ராங்க. சுவர் முழுவதும் நந்தி உருவத்தை செதுக்கி இருக்காங்க. இந்தக் கோவிலோட சிறப்பே இங்கு செதுக்கப்பட்ட சிற்பங்கள்தான். சாமி கும்பிட்டது போதும்! வாங்க அடுத்த இடத்துக்கு போலாம்..
சரி, சரி அடுத்து எங்க?வராக குகைக் கோயிலுக்கு போலாம். குகை போன்று இருப்பதால இதுக்கு குகைகோயில்னு பேர் வச்சிருக்காங்க. இந்தக் கோவிலின் உள்ளே விஷ்ணுவின் வராக அவதாரத்தை சித்தரிக்கும் வகையில் சிற்பங்கள் அமைந்திருக்கின்றன.
மகாபலிபுரத்தில் ஒரே ஒரு குகைக்கோவில்தான் இருக்கா?
மொத்தம் 13 குகைக்கோயில்கள் இருக்கு. இந்தக் கோவில் காலத்தால் சிறப்பு வாய்ந்தது. கோனேரி மண்டபம், மஹிசாசுரமர்த்தினி குகை, வராக மண்டபம், ஆதிவராஹ திருமுர்த்தி குகை மற்றும் கிருஷ்ண மண்டபம் போன்ற பல குகைக் கோயில்கள் இருக்குது.
வாங்க மஹிசாசுர மர்த்தினி குகைக்கோயிலுக்கு போகலாம்.
இந்தக் கோயிலில் மஹிசாசுர மர்த்தினி மகிஷனை வதம் செய்யும் காட்சி ஒரு பக்கமும் பகவான் விஷ்ணு பள்ளி கொண்டிருக்கும் காட்சி இன்னொரு பக்கமும் செதுக்கப்பட்டிருக்கு. பாத்துட்டீங்களா?நடந்து நடந்து கால் வலிக்குதுப்பா! சரி அடுத்த இடத்துக்கு போலாம்.
உங்களுக்கு வெண்ணெய்னா பிடிக்குமா?
ஏதோ கொஞ்சம் சாப்பிடுவேன்.
இதோ பாருங்க இதுதான் கிருஷ்ணரின் வெண்ணெய் உருண்டை. தள்ளுனா உருண்டுடும்னு பயப்படாதீங்க. உங்களால ஒரு துளி கூட தள்ளமுடியாது. இந்தப் கல் பாறை எந்த பிடிப்பும் இல்லாமல் நிற்கிறது. இந்த வெண்ணெயையும் கொஞ்சம் சாப்பிடுங்க.இருங்க சார்! உருண்டையை தள்ளுற மாதிரி போட்டோ எடுத்துக்குறேன்.
எடுத்தாச்சா? வாங்க புலிக்குகைக்கு போலாம்.
புலிக்குகையா! புலினா எனக்கு பயம். நா வல்லப்பா. ஆள விடுங்க..
புலியெல்லாம் இருக்காது.. பேருதான் புலிக்குகை.

அப்படியா? அப்படின்னா போலாம். வாங்க.
இந்தக் குகை பல்லவர் கால கலாச்சார நிகழ்வுகள் நடப்பதற்காக் திறந்தவெளி அரங்கமா உருவாக்கியிருக்காங்க. பல பழைமையான சிற்பங்களும் இங்கு இருக்கு. போய் பாத்துட்டு வாங்க.
சரி, மகாபலிபுரத்தோட பிரபலமான சுற்றுலாத் தளங்களையெல்லாம் சுத்திக் காண்பிச்சாச்சு. மகாபலிபுரம் எப்படி இருக்கு.
அருமையா இருக்கு, கற்களில் கலை நயத்தை கண்டது என்னை மகிழ்ச்சியடையச் செய்கிறது. எப்படியோ ஒரு வழியா பல்லவர்களோட சிற்பக்கலையையும், ரசனையையும் அறிஞ்சுக்கிட்டேன்.சுத்திக் காமிச்சதுக்கு ரொம்ப நன்றி. உங்களுக்கு எவ்ளோ பணம் குடுக்கணும்.
பணம் எல்லாம் வேண்டாம். என் நண்பன் தமிழக சுற்றுலான்னு வலைப்பதிவு எழுதுறான்,
முடிஞ்சா வலைப்பதிவை போய் பாருங்க. பிடிச்சுருந்தா அதுல பின்னூட்டம் போடுங்க.. அதுவே போதும்.
ரொம்ப நன்றி தம்பி. போயிட்டுவர்ரேன்.
என்ன மாமல்லபுரத்தைப் பற்றி தெரிந்துகொண்டீர்களா. அவர் சொன்னது போல மறக்காமல் பின்னூட்டம் போடுங்க..
குறிப்பு : இந்த இடங்கள் அனைத்தும் மாமல்லபுரத்தில் உள்ளது. ஒவ்வொரு இடமும் மற்ற இடங்களில் இருந்து சிறிது தொலைவில் உள்ளது.
எப்படி செல்வது என்றுதானே கேட்கீறீர்கள்?
1)மகாபலிபுரத்துக்கு சென்னை, காஞ்சிபுரம், பாண்டிச்சேரி போன்ற பல இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
2)அருகில் உள்ள ரயில் நிலையம் : செங்கல்பட்டு 29 கி.மீ தொலைவில்
3)அருகில் உள்ள விமான நிலையம் : சென்னை 58 கி.மீ தொலைவில்
Tourist Office in Mamallapuram:
Kancheepuram District,
Mamallapuram - 603 104.
Ph: 04114 - 242232.
திசம்பர் - ஜனவரி மாதங்களில் இங்கு நாட்டியத் திருவிழாவும் நடைபெறும். கிளம்புங்க மாமல்லபுரத்துக்கு...
.
14.3.10
மாமல்லபுரம் - Mamallapuram
இந்த பதிவில் சுற்றுலாப் பயணியும், வழிகாட்டியும் பேசிக்கொள்வது போல் உங்களுக்கு மாமல்லபுரத்தைப் பற்றி கூறப் போகிறேன். இனி அவர்கள் பேச்சை கவனிப்போம்.
வணக்கம்! மாமல்லபுரத்தை எங்களுக்குச் சுற்றிக் காமிக்க முடியுமா?
நிச்சயமாக. அதுதான் எனது வேலையே. வாங்க போகலாம்.
நீங்க எங்கிருந்து வர்றீங்க?
மதுரைலேந்து. பசங்களுக்கெல்லாம் லீவு விட்டதால ஊரைச் சுத்தலாமுன்னு கெளம்பிட்டோம்.
சரி மாமல்லபுரத்தைப் பற்றி தெரிஞ்சுக்குவோம். காஞ்சிபுரம் மாவட்டத்துல இருக்கிற மாமல்லபுரத்துக்கு மகாபலிபுரமுன்னு இன்னொரு பேரும் இருக்கு. மாமல்லபுரம் ஏழாம் நூற்றாண்டில் பல்லவ நாட்டோட முக்கியமான துறைமுகமாக இருந்தது. இந்த இடத்துக்கு பல்லவ மன்னன் மாமல்லாவின் பெயரைக்கொண்டு பெயர் வைக்கப்பட்டதாக இன்று வரை நம்பப் படுகிறது. இந்த இடத்துல இருக்கிற பல சிற்பங்கள் ஏழாம் நூற்றாண்டு முதல் ஒன்பதாம் நூற்றாண்டு வரை நிறுவப்பட்டது.
இந்த இடத்துக்கு வேற என்ன சிறப்பெல்லாம் இருக்கு?
இந்த இடத்தை ஐ.நா சபையோட UNESCO உலக பாரம்பரியச் சின்னமாக அறிவிச்சிருக்கு. மேலும் இந்த இடம் தமிழகத்தோட மிக பிரபலமான சுற்றுலாத் தளமாகவும் விளங்குகிறது. இந்த இடத்தின் மூலம் தமிழகத்தின் வரலாற்றையும் சிற்பக்கலையையும் பாரம்பரியத்தையும் தெரிஞ்சுக்கிறதுக்காக பல வெளிநாட்டுப் பயணிகளும் வர்ராங்க.
மாமல்லபுரத்தில் பார்க்க வேண்டிய இடங்களைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்க.
மாமல்லபுரத்தின் கடற்கரை கோயில், குகைக் கோவில்கள், அர்சுணன் தபசு செய்யும் சிற்பம், ஐந்து ரதம், புலிக் குகை மற்றும் ஏராளமான சிற்பங்கள் இருக்கின்றன. அவற்றை பார்க்க போகலாம் வாங்க.
இவைதான் ஐந்து ரதம். இயற்கையான பாறையை செதுக்கி ஒரே கல்லால் ஆன கோவில்கள் தேர் போல இருப்பதால் இதற்கு ரதம் எனும் பேர் வைக்கப்பட்டது. முதலாம் நரசிம்மவர்மன்தான் இதை உருவாக்கியவர். இந்த ஐந்து கற்கோவில்களும் பஞ்சபாண்டவ இரதங்கள் என்றும் சொல்லலாம்.
எல்லாமே ஒற்றைக் கற்களால் ஆனவையா?
இதில் நான்கு ரதங்கள் ஒரே கல்லால் செய்யப்பட்டவை என ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஒன்று மட்டும் சில கற்களால் இணைத்து செய்யப்பட்டதுள்ளது.
அடுத்து எங்கு செல்லப் போகிறோம்?
வாங்க அர்ச்சுணன் தபசு பற்றி தெரிந்துகொள்ளலாம். பெரிய பாறையில் பல சிற்பங்களை செதுக்கி வடிவமைக்கப்பட்டதுதான் இந்த அருச்சுணன் தபசு. முப்பது மீட்டர் உயரமும், அறுபது மீட்டர் நீளமும் இருக்கிறது.
நல்லா பாத்தீங்கனா இதுல நாலு நிலைகள் இருப்பது தெரியும். முதல் நிலை விண்ணுலகத்தை குறிக்கிறது. இரண்டாவது விண்ணுலகிற்கும் மண்ணுலகிற்கும் இடைப்பட்ட நிலையை குறிக்குது. மூண்றாவது மண்ணுலகம், நான்காவது பாதாள உலகத்தையும் உணர்த்துவதாக ஆராய்ந்தவர்கள் கூறுகிறார்கள்.
இதற்கு எப்படி அர்ச்சுணன் தபசுன்னு பேர் வைத்தார்கள்?
இதில் உள்ள ஒரு சிற்பம் ஒரு மனிதன் தவம் செய்வது போல வடிவமைக்கப்பட்டுள்ளது. இது அர்ச்சுணன் பாசுபத அஸ்திரம் வேண்டி சிவனை நோக்கி தவம் இருந்ததால் இதனால் இதற்கு அருச்சுணன் தபசு என அழைக்கிறோம். சில பேர் பகீரதன் சிவனை நோக்கி தவம் இருப்பது போல் தோன்றுவதால் இதனை பகீரதன் தபசுன்னு குறிக்கிறார்கள்.
சரி ரொம்ப பசிக்குது, சாப்பிட்டு வந்து மற்ற இடங்களை பார்க்கலாம்.
உங்க இஷ்டம். சாப்பிட்டு சீக்கிரம் வந்துடுங்க.
அவர்கள் சாப்பிட்டு வரும் வரை நீங்களும் காத்திருங்கள், மகாபலிபுரத்தைப் பற்றிய அடுத்த பதிவுக்காக.

25.2.10
செட்டிநாட்டு வீடுகள் - பாகம் 2 - Chettinad Houses part 2
செட்டிநாட்டு வீடுகளை பற்றி போன பதிவில் கூறியிருந்தேன்.. இன்றும் செட்டிநாட்டு வீடுகளைப் பற்றிப் பார்க்கலாம். இந்த வீடுகளின் சுவர்கள் முழுவதும் சிறப்பான கலவை கொண்டு பூசப்பட்டுள்ளது. இந்த கலவை முட்டை ஓடுகள், எலுமிச்சை சாறு, வாசனை பொருட்கள் போன்ற பலவற்றை கொண்டு செய்யப்படுகிறது. இந்த கலவை கொண்டு சுவர்கள் பூசப்படுவதால் வீடு வெயில் காலங்களில் கூட குளிர்ச்சியாக இருக்கும். இந்த கலவையை குளிர்சாதனப் பெட்டிக்கு ஒப்புமைப் படுத்தலாம். இந்த கலவையைப் பயன்படுத்துவதால் சுவர்கள் பொலிவுடன் விளங்குவதோடு சுத்தப்படுத்துவதற்கு எளிதாகவும் இருக்கிறது. இந்த வீடுகள் மிக உயரமாகவும் , காற்றோட்டம் நிறைந்ததாகவும் இருக்கின்றன. இந்த வீடுகளின் தரைகள் சிமெண்டால் பூசப்பட்டு பின்னர் வண்ணமாக்கப்பட்டுள்ளன. சில வீடுகளின் தரைகள் ஆத்தங்குடி கற்களால் கட்டப்பட்டவை.
இந்த வீடுகளின் நடுவில் இருக்கும் வெட்டவெளியான இடம் வெளிச்சத்தையும் காற்றோட்டத்தையும் வழங்குகிறது. இந்த இடம் மூலம் மழை நீரை சேமிக்கலாம். அதாவது மழை பெய்யும் போது தண்ணீர் இந்த இடத்தில் விழுந்து கொடுக்கப்பட்டிருக்கும் வழியே சென்று சேமிக்கப்படுகிறது. இந்த வழியை மழை பெய்யாத காலங்களில் அடைக்க அதெற்கென்று செதுக்கப்பட்ட கல் உபயோகப்படுத்தப்படுகிறது. பல வீடுகளின் ஜன்னல் கண்ணாடிகள் பெல்ஜியம் கண்ணாடிகளால் ஆனவை.
வீடுகளைப் பற்றி சில தகவல்களைத் தெரிந்து கொண்டீர்கள்.. இப்போது இங்கு இருக்கும் மேலும் பல விஷயங்களை தெரிந்துகொள்ளலாம். அப்படி என்ன இந்த வீடுகளுக்குள் இருக்கும்? அரிய மரச்சாமான்கள், பித்தளைச் சாமான்கள், ஓலைகளால் ஆன கலைப் பொருட்கள் போன்றவை இருக்கும்.. அதற்கும் மேலாக செட்டிநாட்டு உணவு வகைகளை ஒரு கை பிடிக்கலாம். உணவு வகைகளை பற்றி குறிப்பிடும் போது நொருக்குத் தீனிகளைப் பற்றியும் சொல்ல வேண்டும்.. செட்டிநாட்டுக்கு என்றே நொருக்குத்தீனிகள் இருக்கின்றன, உதாரணமாக சிலவற்றைக் குறிப்பிடுகிறேன். உக்காரை , கந்தரப்பம், கருப்பட்டி பணியாரம், வெள்ளைப் பணியாரம் , கவுனியரிசி , பால் பணியாரம் , தேன்குழல் , சீப்பு சீடை, மனகோலம் போன்ற என்னற்றவை இங்கு பிரபலம். சிலவற்றை நாம் அறிந்திருக்கக்கூட முடியாது. இந்த உணவு வகைகள் அனைத்தும் சுவையுடன் இருப்பது மட்டுமல்லாமல் நம்மை சாப்பிடத் தூண்டுபவை.
பனை ஓலைகளைக் கொண்டு பல வடிவங்களில் பெட்டிகளை கையால் செய்து உபயோகப்படுத்துகின்றனர். இந்த பெட்டிகள் பல வண்ணங்களில் பல வடிவங்களை இருக்கின்றன. ஒய்வு நேரங்களில் இவர்கள் செய்த எம்ப்ராயடரி இன்று வீடுகளில் காட்சிப் பொருட்களாக விளங்குகிறது. எம்ப்ராயடரி என்றால் தற்போது உள்ளது போல அல்ல! வெறும் x வடிவத்தில் துணி முழுவதையும் வண்ண நூல்களால் நிறப்பி உருவாக்கியுள்ளனர். பித்தளைப் பாத்திரங்கள் எல்லாம் பெரிது பெரிதாய் நிற்கின்றன் இந்த வீடுகளில்.. மரச் சாமாண்கள் கலை நயத்தோடு சிறிதும் பெரிதுமாக இருக்கின்றன. அனைத்தும் அழகாக செதுக்கப்பட்டுள்ளன. முன்னாட்களில் செட்டிநாட்டுத் திருமணங்கள் திருவிழா போல் ஒரு வாரம் நடைபெற்றன என்று கூறுவர், ஆனால் இப்போது வெறும் மூன்று நாட்களே நடைபெறுகின்றன. கீழுள்ள வீடியோவைப் பார்த்து செட்டிநாட்டுத் திருமணங்களைப் பற்றி மேலும் அறிந்துகொள்ளுங்கள்.
வீடுகள் என்று தலைப்பில் கூறிவிட்டு இதை எல்லாம் எதற்கு கூறுகிறேன் எனக் கேட்கலாம்.. இவை அனைத்தும் இந்த வீடுகளின் பாரம்பரியத்தையும் கலைநயத்தையும் கூற இந்த வீடுகளில் இருப்பவை. என்னைக் கேட்டால் செட்டிநாட்டு மக்கள் இவற்றைப் பாதுகாக்கவும் அடுத்த தலைமுறையினருக்கு கற்றுக் கொடுக்கவும் மறந்துவிட்டார்கள்.. ஆனால் உணவுப் பொருட்கள் மட்டும் இன்றுவரை நடைமுறையில் உள்ளன.
இந்த வீடுகளில் சில வீடுகள் மற்றுமே சுற்றுலாத் தளமாக விளங்குகிறது. நீங்கள் மற்ற வீடுகளை காண வேண்டும் என்றால் அனுமதி பெற வேண்டும். மேலும் சிலவற்றை சுற்றுலாத் தளமாக ஆக்க சுற்றுலாத் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
சுற்றுலாத் தளமாக்கப்பட்ட சில வீடுகள்:
1)S.A.R Muthiah house.
2)Muthiah chettiar, raja of chettinad - kanadukathan.
3)Muthiah's brother house - kanadukathan.
மீண்டும் உங்களுக்காக இங்கு எப்படி செல்வது?
குறிப்பு : இந்த வீடுகள் சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி, தேவகோட்டை, கானடுகாத்தான், பள்ளத்தூர், ஆத்தங்குடி, சிவகங்கை, நாட்டரசன்கோட்டை போன்ற ஊர்களில் அமைந்துள்ளது. குறிப்பாக இந்த இடம் என கூறமுடியாது. இந்த ஊர்களுக்கு சென்றால் நிச்சயம் செட்டிநாட்டின் வீடுகளை காணலாம்.
1)சென்னை மற்றும் பல்வேறு இடங்களில் இருந்து இந்த ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
2)காரைக்குடி, தேவகோட்டை, சிவகங்கையில் ரயில் நிலையம் உள்ளது. அங்கிருந்து மற்ற இடங்களுக்கு பேருந்துகளில் செல்லலாம்.
3)அருகில் உள்ள விமான நிலையம் - மதுரை 90 கி.மீ தொலைவில்.

போன பதிவில் நமது நண்பர் டெக் ஷங்கர் பின்னூட்டத்தில் செட்டிநாட்டு வீடுகளின் புகைப்படத் தொகுப்பை அனுப்பியிருந்தார். அவை உங்கள் பார்வைக்காக
இங்கு செல்ல முடியவில்லை என்றால் சென்னையில் ECR ரோட்டில் முத்துக்காடு அருகில் இருக்கும் தக்ஸின் சித்ரா எனும் இடத்துக்கு சென்று வாருங்கள், செட்டிநாட்டு வீடுகளைப் போல் இங்கும் ஒரு வீடு இருக்கிறது.
23.2.10
செட்டிநாட்டு வீடுகள் - Chettinad Houses

எப்போதும் கோவில்கள், சரணாலயங்கள், அரண்மனைகள் பற்றியே சொல்லிக்கொண்டிருக்கிறோமே! வித்தியாசமான எதைப் பற்றியாவது சொல்லலாம் என்று தேடியபோது என் கண்ணில் பட்டது செட்டிநாட்டின் பாரம்பரியமிக்க கலைநயமுடன் கூடிய வீடுகள். சரி! இன்று சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அமைந்திருக்கும் செட்டிநாட்டின் பெருமையைக் கூறும் வீடுகளை பற்றி பார்க்கலாம்.
நாட்டுக்கோட்டை நகரத்தார்களே செட்டியார்கள் எனப்படுவர். அவர்கள் கட்டிய வீடுகளே இன்று சிவகங்கை மாவட்டத்தை அலங்கரித்துக்கொண்டிருக்கின்றன. இந்த செட்டிநாட்டு வீடுகள் பெரும்பாலும் பர்மா தேக்குகளாலும், ஆத்தங்குடி கற்களாலும் கட்டப்பட்டவை. இவர்கள் பர்மாவில் வணிகம் செய்துவந்த காரணத்தால் பர்மாவில் இருந்து தேக்குகள் இறக்குமதி செய்யப்பட்டு கட்டப்பட்டவை. இந்த வீடுகள் அனைத்தும் 1980 ஆம் ஆண்டுக்கு முன்னரே கட்டபட்டவை. இப்போதெல்லாம் இந்த வீடுகளை போல கட்ட நினைத்தால் கோடிக்கணக்கில் செலவாகும். அந்தக் கால்த்தில் சில ஆயிரம் ரூபாய் செலவில் கட்டி முடித்துவிட்டார்கள் நகரத்தார்கள், இன்று இந்த வீடுகளின் மதிப்பு கோடிகளில்.....
இந்த வீடுகளின் அமைப்பை பற்றி சொல்ல வேண்டும் என்றால், இவை அனைத்தும் செவ்வக வடிவில் கட்டப்பட்டுள்ளன. நீங்கள் வீட்டின் முன் கதவில் நின்று பார்த்தால் வீட்டின் கடைசிவரை தெரியும். சில வீடுகளின் முன் வாசல் ஒரு தெருவில் இருக்கும் பின் வாசல் இன்னொரு தெருவில் இருக்கும். புரியும் படியாக சொல்லவேண்டும் என்றால் parallel streets இன் நடுவே இந்த வீடுகள் அமைந்திருக்கும்.
வீட்டின் முகப்பில் வாசலுக்கு இருபுறமும் திண்ணை இருக்கும். இந்தக் காலத்துக்கேற்ப சொல்லவேண்டும் என்றால் திண்ணை = வரவேற்பரை. இருபுறத்திலும் உள்ள திண்ணைகளில் ஒருபுறத்தில் சேமிப்பு அறை, இன்னொரு புறத்தில் கணக்குப்பிள்ளையின் அறை, வீட்டிற்கு முன்னால் கேணிகள் ,திண்ணையின் அருகே கலைநயமிக்க சிற்பங்களுடன் கூடிய மரத்தால் ஆன கதவுகள் என கலை மிகுந்த கட்டிடமாக விளங்குகின்றன இந்த வீடுக்ள்.
இந்த கதவுகளிலின் மேற்புறத்தில் பெரும்பாலும் லஷ்மியின் உருவம் அல்லது கும்பம் போன்றவை பதிக்கப்பட்டிருக்கும். இந்த கதவை தாண்டிச் சென்றால் வெட்டவெளியான இடம் இருக்கும். இந்த இடத்தைச் சுற்றிலும் பல அறைகள் இருக்கும். இந்த அறைகளை தனது பிள்ளைகளுக்கு திருமணம் நடந்தவுடன் பரிசாக கொடுத்துவிடுவார்கள். இப்போது வீட்டையே பரிசாக கொடுக்கின்றனர். இதையும் தாண்டிச் சென்றால் இரண்டாம் கட்டு என்ற அமைப்பு உள்ளது - உணவு உண்ணும் அறை. இதையும் தாண்டினால் மூன்றாம் கட்டு மற்றும் நாலாம் கட்டும் அதற்கு பின்னர் தோட்டமும் இருக்கும். இதில் மூன்றாம் கட்டு பெண்கள் ஒய்வெடுப்பதற்காக பயன்படுத்தபடுகிறது. நாலாம் கட்டு - சமையலறை. தோட்டத்தில் கிணறும் ஆட்டுக்கல்லும் இருக்கும். அதாம்பா க்ரைண்டர். பல வீடுகள் மாடியுடன் கட்டப்பட்டிருக்கும். மாடி முழுவதும் அறைகள் இருக்கும். சாமான்களை சேமிப்பதற்காக! வீடு முழுவதும் சன்னல்களும் தூண்களும் நிறைந்திருக்கும்.
போன பதிவில் ஒரு திரைப்படத்தைப் பார்த்து தகவல்களை அறிந்து கொள்வதை விட நேரே சென்றுவாருங்கள் என்று கூறியிருந்தேன். இப்போது ஒரு திரைப்படத்தைப் பாருங்கள் எனக் கூறுகிறேன்(மன்னிக்கவும்!!). இந்த வீடுகளைப் பற்றி மேலும் அறிய பிரிவோம் சந்திப்போம் என்ற படத்தைப் பாருங்கள், இப்படத்தின் முதல் பாதி நகரத்தார்களின் வாழ்க்கை முறையைச் சித்தரித்துள்ளது.
இங்கு எப்படி செல்வது?
குறிப்பு : இந்த வீடுகள் சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி, தேவகோட்டை, கானடுகாத்தான், பள்ளத்தூர், ஆத்தங்குடி, சிவகங்கை, நாட்டரசன்கோட்டை போன்ற ஊர்களில் அமைந்துள்ளது. குறிப்பாக இந்த இடம் என கூறமுடியாது. இந்த ஊர்களுக்கு சென்றால் நிச்சயம் செட்டிநாட்டின் வீடுகளை காணலாம்.

1)சென்னை மற்றும் பல்வேறு இடங்களில் இருந்து இந்த ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
2)காரைக்குடி, தேவகோட்டை, சிவகங்கையில் ரயில் நிலையம் உள்ளது. அங்கிருந்து மற்ற இடங்களுக்கு பேருந்துகளில் செல்லலாம்.
3)அருகில் உள்ள விமான நிலையம் - மதுரை 90 கி.மீ தொலைவில்.
மேலும் விபரங்களுக்கு படத்தைப் பார்க்கவும்.(A என்பது நாட்டரசன்கோட்டை)
இந்த வீடுகளைப் பற்றி இன்னும் சொல்லவேண்டியிருக்கிறது, செட்டிநாட்டு வீடுகள் அடுத்த பதிவிலும் இடம்பெறும், அடுத்த பதிவுக்காக காத்திருங்கள்.
.
20.2.10
கங்கை கொண்ட சோழபுரம் - Gangai Konda Cholapuram
இன்று நாம் சோழர்கள் எழுப்பிய கங்கை கொண்ட சோழபுரத்தைப் பற்றி பார்க்கப் போகிறோம். கங்கை கொண்ட சோழபுரம் தமிழகத்தின் அரியலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. பதினொன்றாம் நூற்றாண்டில் முதலாம் ராஜேந்திர சோழன் இதை தனது தலைநகரமாக ஆக்கினார்.
தஞ்சைப் பெரிய கோயில் கட்டி முடிக்கப்பட்டு இருபது ஆண்டுகளில் இந்தக் கோயிலும் கட்டி முடிக்கப்பட்டது. தஞ்சைப் பெரிய கோவிலை பற்றி மேலும் அறிந்து கொள்ள எனது முந்தைய இடுகையைப் பார்க்கவும்.
தஞ்சையில் ஆண்மையின் வீரம் தெரிவது போல கங்கை கொண்ட சோழபுரத்தில் பெண்மையின் அழகும் மென்மையும் வெளிப்படுகிறது என்றே கூறலாம். ஒரு பெண் எப்படி மற்றவர்களை கவர்கிறாளோ அது போலவே இந்தக் கோவிலும் அமைக்கப்பட்டிருக்கிறது. அது எப்படி என நீங்கள் கேட்கலாம். அதாவது கோயில் விமான அமைப்பில் நேர் கோடுகள் இல்லாமல் நெளிவுகள் இருக்கின்றன. தஞ்சையை விட இந்தக் கோவில் மிகவும் பொலிவுடன் விளங்குகிறது என்பதும் இதற்கு ஒரு காரணம்.
இந்தக் கோயிலின் முகப்பு பகுதி மஹாதுவார் என்று அழைக்கப்படுகிறது. விமானத்தின் உயரம் 182 அடி. ஆனால் தஞ்சை விமானத்தைவிட சிறியது. விமானத்தில் எட்டு நிலைகள் இருக்கின்றன. கோபுரத்தின் பல இடங்களில் நெளிவுக் கோடுகள் போடப்பட்டிருப்பது இந்தக் கோவிலின் பெண்மையை குறிக்கிறது. இந்தக் கோவிலின் மூலம் பருவம் அடைந்த பெண்ணின் அழகை சோழர்களின் கலைத்திறமையின் மூலம் அறியலாம்.
இன்னும் சொல்ல வேண்டும் என்றால் தஞ்சை பெரிய கோவிலைப் போல் கட்ட எண்ணி உருவாக்கப்பட்டதுதான் இந்தக் கோவில். கடைசியில் பல மாற்றங்களோடும் பெண்மையோடும் உருவானதே இந்தக் கலைக் கோவில். கற்சிலைகளே இந்தக் கோவிலின் பொக்கிஷமாகும். பல பேர் இந்தக் கோவிலைக் கொள்ளையடித்ததாக கூறினாலும் சோழர்களின் பெருமையை நிலைநாட்ட கற்சிலைகள் கோவிலில் அணிவகுத்து நிற்கின்றன. இதில் குறிப்பிட்டு கூறவேண்டியது சிங்க கேணியும், ராஜராஜ சோழனுக்கு சிவனும் பார்வதியும் முடிசூட்டுவதும், நாட்டியமாடும் விநாயகரும், அர்த்தநாரிஸ்வரரும் ஆகும். இங்கு இருக்கும் கேணியின் மேல் பகுதி சிங்க வடிவில் அமைக்கப்பட்டுள்ளது அதுவே சிங்க கேணியாகும். தஞ்சையைப் போன்று பெரிய நந்தியும் இங்கு உண்டு.
இந்தக் கோவிலின் சிவலிங்கம் 4 மீ உயரம் உள்ளது. அரச குடும்பத்தினர் வழிபடுவதற்காக தனி வழியும் உருவாக்கப்பட்டுள்ளது. சோழர்களின் வாழ்க்கை வரலாறே இந்தக் கோவிலில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்று கூறலாம். கோவிலில் பல இடங்களில் சோழர்களைப் பற்றிய அறிய தகவல்கள் இங்கு பொறிக்கப்பட்டிருக்கின்றன. ஆயிரத்தில் ஒருவன் படத்தைப் பார்த்து சோழர்களைப் பற்றி அறிவதற்கு பதிலாக இங்கு சென்று அறிந்துகொள்ளுங்கள், அந்தப் படத்தில் இருப்பதை விட அதிக தகவல்களை தெரிந்துகொள்ளலாம்.
கட்டிடக்கலையும் சிற்பக்கலையும் பிரம்மாண்டமுமே இந்தக் கோவிலின் சிறப்பம்சம். அதை பாதுகாப்பது நமது கடமையும் கூட. முடிந்தால் இங்கு சென்று வாருங்கள், கோவிலை தூய்மையாக வைத்திருக்க உதவுங்கள்.
இங்கு செல்ல முடியவில்லை என்றால் பரவாயில்லை. பல பேருக்கு இந்த இடுகையைப் பற்றி தெரியப்படுத்துங்கள், அவர்கள் செல்லட்டும். கடைசியாக ஒன்று தஞ்சை ஆண்மைக்கு அடையாளம் கங்கை கொண்ட சோழபுரம் பெண்மைக்கு அடையாளம்.
எப்படி செல்வது?
1)தமிழகத்தின் பல இடங்களில் இருந்து அரியலூருக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன
2)அரியலூரில் ரயில் நிலையமும் உள்ளது மேலும் விபரங்கள்
3)அருகில் உள்ள விமான நிலையம் - திருச்சி 64 கி.மீ தொலைவில்.
வாசகர் விருப்பம் பகுதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய இடத்தைப் பற்றி என்னிடம் கேளுங்கள்.

18.2.10
திருமலை நாயக்கர் மஹால் - Thirumalai Nayakar Mahal
மதுரையில் உள்ள திருமலை நாயக்கர் மஹாலைப் பற்றி இன்று பார்க்கலாம். மதுரை, மீனாட்சிக்கு மட்டும் பெயர் போனதல்ல! நாயக்கர் மஹாலுக்கும் பெயர் போனதுதான். 17ஆம் நூற்றாண்டில் மதுரையை ஆண்ட நாயக்கர் மன்னரால் கி.பி.1636 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. ஒரு இத்தாலிய கட்டிடக் கலைஞரால் இஸ்லாமிய, திராவிட, ஐரோப்பிய கட்டிடக் கலைகளை பின்பற்றி கட்டப்பட்டுள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை அறிந்திராதவர் எவரும் இல்லை என நினைக்கிறேன். அக்கோவிலில் இருந்து 1.5 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இந்த மஹால். உள்ளே செல்லும்போது நீங்கள் 3700 சதுர கி.மீ பரப்பளவுடன் கூடிய மஹாலின் மத்தியில் அமைந்துள்ள மைதானம் போன்ற அமைப்பை காண முடியும். அதை சுற்றிலும் வட்ட வடிவில் பிரமாண்டமான தூண்கள் மஹாலை தூக்கி நிறுத்துகின்றன. தற்போது அந்த இடம் பூங்காவாக மாறியுள்ளது.
இந்த மஹால் இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒன்று சொர்க்க விலாசம் மற்றொன்று ரங்க விலாசம். இதில் சொர்க்க விலாசம் அரசவையாக பயன்படுத்தப்பட்டது. அனைத்து கட்டிடங்களும் இந்த இரண்டு பகுதிகளுக்குள் அடங்கிவிடும். மஹாலின் சிறப்பம்சமே அங்கு இருக்கும் பிரமாண்ட தூண்கள். பல தூண்களை நீங்கள் என்ன நினைத்தாலும் கட்டிப்பிடிக்க முடியாது, அவ்வளவு பெரிய தூண்கள். (என்னே நாயக்கரின் கட்டிடக்கலை). அந்த காலங்களில் வசதிகள் இல்லாத நிலையிலும் நமது மன்னர்கள் பிரமாண்டத்தையே விரும்பினர் என்பதற்கு இதுவே நல்ல எடுத்துக்காட்டாகும். ஆனால் நாமோ இன்று வசதிகள் இருந்தும் சிறிய கட்டிடங்களை எழுப்பிவருகிறோம்.
இந்த மஹால் முழுவதும் செங்கல் போன்ற கற்கலால் கட்டப்பட்டது. மொத்த மஹாலும் சுண்ணாம்பு மற்றும் முட்டையின் வெள்ளைக் கருவை கலந்து பூசப்பட்டுள்ளது. இந்த மஹாலில் மொத்தம் 248 தூண்கள் உள்ளன. ஒவ்வொன்றொன்றும் 58 அடி நீளமும் 5 அடி விட்டமும் கொண்டது. தற்போது உள்ள கட்டிடத்தை விட 4 மடங்கு பெரிதாக கட்டபட்டது இந்த மஹால் என்று ஆராய்ச்சி கூறுகிறது.
தற்போது தமிழக அரசின் தொல்பொருள் ஆராய்ச்சி துறையின் கீழ் இந்த மஹால் இயங்குகிறது. தினமும் கண்கவர் ஒளி மற்றும் ஒலிக் காட்சிகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நடைபெறுகிறது. முக்கியமாக சிலப்பதிகாரத்தை பற்றி இந்த காட்சிகள் நடத்தப்படுகின்றன. இந்த மஹாலைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள மஹாலுக்கே சென்று வாருங்கள்.
எப்படி செல்வது என்றுதானே கேட்கீறீர்கள்?
மதுரைக்கு செல்ல வழி சொல்ல வேண்டுமா என்ன? இருந்தாலும் சொல்கிறேன்.
1) தமிழகத்தின் பல இடங்களில் இருந்து மதுரைக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
2)மதுரையில் ரயில் நிலையம் உள்ளது. மேலும் விபரங்கள்
3)மதுரையில் விமான நிலையமும் உள்ளது.
குறிப்பு: மீனாட்சி அம்மன் கோவிலில் இருந்து 1.5 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
கட்டணம்:
உள்நுழைய : ரூ.1
ஒளி மற்றும் ஒலிக் காட்சி.
பெரியவர் : ரூ.10
சிறுவர் : ரூ.5
நேரம்:
காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மற்றும்
மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை.
ஒளி மற்றும் ஒலிக் காட்சி.
தமிழில் இரவு 8.15 மணிக்கு
ஆங்கிலத்தில் இரவு 6.45 மணிக்கு

1.2.10
பத்மநாபபுரம் அரண்மனை - Padmanabapuram palace
கன்னியாகுமரியில் உள்ள பிரபலமான பத்மநாபபுரம் அரண்மனையை பற்றி இந்த பதிவில் விரிவாக காண்போம். கன்னியாகுமரி மாவட்டத்தில், நாகர்கோவிலில் இருந்து 15 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இந்த பிரம்மாண்டமான அரண்மனை. 1798 ஆம் ஆண்டு வரை இந்த அரண்மணை டிரவண்கோர் ஆட்சியாளர்களின் தலை நகரமாக இருந்தது.
இந்த அரண்மனை 1601 ஆம் ஆண்டு இரவிப்பிள்ளை இரவிவர்ம குலசேகர பெருமாள் என்பவரால் கட்டப்பட்டது. மந்திர சாலை, தை கொட்டாரம், நாடக சாலை, நான்கு மாடி கட்டிடம், தெற்கு கொட்டாரம் ஆகிய அமைப்புகளை உள்ளடக்கியுள்ளது. அரசவையே மந்திர சாலை என்று அழைக்கப்பட்டது.
மந்திர சாலையின் ஜன்னல்கள் அழகிய வண்ணமயமான மைகாவால் கட்டப்பட்டது. மைகா வெயிலின் அளவை குறைக்கிறது. தரை தேங்காய் மூடிகளாலும், முட்டைகளாலும் ஆனது. தமிழகத்தில் இருந்தாலும் அரண்மனை கேரள கட்டிடக் கலையின் பாணியிலே அமைக்கப்பட்டுள்ளது.
தை கொட்டாரம் பழமையான கட்டிடம் என்றே சொல்லப்படுகிறது. இந்த கொட்டாரத்தில் நாலுகட்டு, ஏகாந்த மண்டபம் போன்ற அமைப்புகளும் உள்ளன. சில தூண்கள் ஒரே பலா மரத்தால் மிகுந்த கலை வேலைப்பாட்டுடன பிரமாண்டமாய் நிமிர்ந்து நிற்கிறது. தெற்கு கொட்டாரம் 400 ஆண்டுகள் பழமையானது. இப்போது அருங்காட்சியமாக காணப்படுகிறது. நான்கு அடுக்கு கட்டிடத்தின் நான்காவது மாடி உப்பரிக்க மளிகா என்றழைக்கப்படுகிறது.
நீங்களும் பத்மநாபபுரம் அரண்மனைக்குச் சென்று நமது முன்னோர்களின் கலைத் திறமையையும், கட்டிடக்கலையையும், பாரம்பரியத்தையும் , பிரம்மாண்டத்தையும் கண்டு களிக்கலாமெ!!!
எப்படி செல்வது என கேட்கிறீர்களா?
1)மிக அருகில் திருவனந்தபுரம் விமான நிலையம் உள்ளது. அங்கு சென்று அங்கிருந்து 87 கி.மீ பயணம் செய்தால் அரண்மனை உங்கள் முன்னே!!
2)கேரளா மற்றும் தமிழகத்தின பல பகுதிகளில் இருந்து ஏராளாமான பேருந்துகள் கன்னியாகுமரிக்கு இயக்கப் படுகின்றன. அதன் மூலம் இங்கு செல்லலாம்.
3)கன்னியாகுமரி ரயில் நிலையத்துக்கு இயக்கப்படும் பல ரயில்கள்
மூலமும் இங்கு சென்றடையலாம்.
கன்னியாகுமரிக்கு செல்லும் ரயில்கள்:
1)Kanyakumari exp - 2633
2)Thirukural exp - 2642
3)Himsagar exp - 6318
4)Kanyakumari exp - 2665
5)Mumbai - Kanyakumar exp - 6381
6)Kanyakumari exp - 6526
திறந்திருக்கும் நேரம்: 9.00 am - 1.00 pm , 2.00 pm - 4.30 pm
திங்கட்கிழமைகளில் செயல்படாது.
கட்டணம்:
பெரியவர் - ரூ.10 சிறுவர் - ரூ.2

10.1.10
தஞ்சை பெரிய கோவில் - Thanjavur temple
தஞ்சை பெருவுடையார் கோவில் அல்லது பிரகதீசுவரர் ஆலயம் அல்லது தஞ்சை பெரிய கோவில் உலக பாரம்பரிய சின்னமாகும். இக்கோவில் 10ஆம் நூற்றாண்டில் இராஜராஜ சோழனால் கட்டப்பட்டது.
தமிழகத்தின் மிகவும் பிரபலமான சுற்றுலாத் தளமான இது 1987ஆம் ஆண்டு UNESCOவால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது.
1006 ஆம் ஆண்டு கட்டத் தொடங்கி 1010ஆம் ஆண்டு முடிக்கப்பட்ட இந்த கோவிலுக்கு இந்த ஆண்டு 1000 வயது பூர்த்தியாகின்றது.
முக்கியமான கட்டடம் 150 அடி நீளத்துடன் கட்டப்பட்டது. கோயிலின் பிரம்மாண்டமான விமானம் கூர்நுனிக் கோபுரமாக அமைந்து கர்ப்பக்கிரகத்திலிருந்து 190அடி உயரத்துடன் கட்டப்பட்டுள்ளது.
இந்த கோயில் தமிழரின் கலைத்திறமையையும், பாரம்பரியத்தையும் உலகிற்கு சொல்கிறது.
இது 35 உட்கோயில்களை கொண்டது. நான்கு திசைகளிலும் பல இடைவெளிகளுக்கு நடுவே இந்த உட்கோயில்கள் உள்ளன. முக்கிய விமானம் உத்தம் வகையைச் சார்ந்தது. இதை தமிழில் மாடக்கோயில் என்றும் கூறுவதுண்டு.
இக்கோயிலின் கட்டிடக்கலை, சோழர்காலக் கட்டிடக்கலைக்கு நல்ல எடுத்துக்காட்டாகும். இந்த கோயிலில் உள்ள நந்தி ஒரே கல்லால் செய்யப்பட்டது. இந்த நந்தி 14 மீ உயரம், 7 மீ நீளம், 3 மீ அகலம் கொண்டது.
இக்கோயிலின் சிறப்பு அம்சம் என்னவென்றால் இக்கோயில் கோபுரத்தின் நிழல் எப்போதும் கீழே விழுவதே இல்லை என்பதாகும்!!!!
தஞ்சாவூர் வழியாக செல்லும் ரயில்கள்:
1) Janshatabdi express
2) Rockfort express
3) Mysore - Mayiladuthurai express
மேலும் தஞ்சாவூர் செல்ல சென்னை மற்றும் கும்பகோணத்தில் இருந்து அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

Subscribe to:
Posts (Atom)