Showing posts with label செய்தி. Show all posts
Showing posts with label செய்தி. Show all posts

9.4.11

ஊட்டி கோடை விழா - 2011

ஊட்டியில் மே 7 முதல் கோடை விழா தொடங்குகிறது.  அதற்காக பல்வேறு இடங்களில் பல்வேறு கண்காட்சிகள் நடக்கவுள்ளன. அந்த விபரங்களை கீழே காணலாம்.


தேதி இடம் நிகழ்ச்சி
மே 7, 8 ஊட்டி ரோஜா பூங்கா ரோஜா கண்காட்சி
மே 8 - மே 16 ஊட்டி மலைப்பகுதி மேம்பாட்டு திட்ட அரங்கு கலை நிகழ்ச்சிகள்
மே 14, 15 கோத்தகிரி நேரு பூங்கா காய்கறி கண்காட்சி
மே 14 - மே 23 தோட்டக்கலைத் துறை விற்பனை வளாகம் புகைப்படக் கண்காட்சி
மே 17 ஊட்டி படகு இல்லம் படகு போட்டி
மே 18 ஊட்டி படகு இல்லம் படகு அலங்கார போட்டி
மே 20, 21, 22 ஊட்டி தாவரவியல் பூங்கா மலர் கண்காட்சி
மே 23 கூடலூர் திரவிய கண்காட்சி
மே 28, 29 குன்னூர் சிம்ஸ் பூங்கா பழக் கண்காட்சி

ஊட்டிக்கு செல்ல திட்டமிட்டிருப்பவர்களுக்கு இந்த தகவல் பயனுள்ளதாக இருக்கும்.

25.6.10

யூ-டியூபில் காலடி எடுத்து வைத்த தமிழக சுற்றுலாத் துறை

யூ-டியூப், பல சுவாரசியமான வீடியோக்களை காண உதவும் தளம், என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.  யூ-டியூப்பில் பல பேர் தங்களுடைய வீடியோக்களை ஏற்றிக் கொண்டிருக்கும் இந்த தருவாயில் நமது தமிழக சுற்றுலா வளர்ச்சிக் கழகமும் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் யூ-டியூப்பில் அடி எடுத்து வைத்திருக்கிறது.






ஆம், யூ-டியூப் மூலம் சுற்றுலா சார்ந்த வீடியோக்களை தமிழக சுற்றுலாப் பயணிகள் மட்டும் அல்லாது இந்த உலகத்தோடு பகிர்ந்து கொள்ளவே இந்தத் திட்டம்.  முதன் முதலாக ஐந்து வீடியோக்களை ஏற்றியுள்ளனர்.  ஐந்துமே அற்புதம். பல சுற்றுலாத் தளங்களை வீடியோவாக எடுத்து அதை எடிட்டிங் செய்து கூடவே மெல்லிய இசையும் சேர்த்து அற்புதமாக ஒரு குறும்படமாக எடுத்துள்ளனர்.  எனக்குத் தெரிந்த வரையில் ஒரு தமிழக அரசு நிறுவனம் யூ-டியூபில் காலடி எடுத்து வைப்பது இதுவே முதல் முறை.  





மேலும் பல வீடியோக்கள் இந்த தளத்தில் பதிவேற்றப்பட்டால், தமிழக சுற்றுலாப் பயணிகளுக்கு இது ஓர் வரப்பிரசாதம். இந்த வசதியை பயன்படுத்தி உங்கள் கருத்துக்களை கூறுங்கள்..




.

29.1.10

சுற்றுலாப் பொருட்காட்சி - Tourism fair

தமிழக அரசின் 36வது சுற்றுலாப் பொருட்காட்சி சென்னையில் நடைபெற்று வருகிறது. திசம்பர் 22ஆம் தேதி முதல் இந்த சுற்றுலா பொருட்காட்சியை தமிழக முதல்வர் தொடங்கி வைத்தார். இது வெற்றிகரமான 36வது சுற்றுலா -தொழில் பொருட்காட்சியாகும்.


இங்கு என்னதான் இருக்கிறது என்று கேட்கிறீர்களா?


இங்கு மத்திய மற்றும் மாநில அரசின் அரங்குகள்,  பல வகையான விளையாட்டுகள், உங்களை கவரும் வகையில் மீன் அருங்காட்சியகம்,
சாகச விளையாட்டுகள்,  உங்கள் பர்ஸை காலியாக்க வணிக வளாகம், உங்கள் வயிரை நிரப்ப ஓட்டல் தமிழ்நாடு, உங்கள் குடும்பத்தோடு பயணம் செய்ய சிறுவர் ரயில் என பல இருக்கிறது.




நீங்கள் அமர்நாத் செல்லவில்லையா? இந்த சுற்றுலா கண்காட்சிக்கு செல்லுங்கள் அமர்நாத் பனிலிங்கம் உங்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது.


கோ-கார்ட் விளையாட்டுகள், திரை இசை, நடனம், மெல்லிசை மற்றும் பல கலை நிகழ்ச்சிகளும் இங்கு உள்ளன.


நீங்களும் எடிசன் ஆகலாம். ஆம்! இங்கு உங்களுக்குள் இருக்கும் விஞ்ஞானியை கண்டுபிடிக்க, உங்கள் அறிவை ஊக்குவிக்க விஞ்ஞான தொழில் நுட்ப அரங்குகளும் உள்ளன. மேலும் பல போட்டிகளும் இங்கு நடத்தப்படுகின்றன.


இங்கு எப்படி செல்வது?


இடம்: சென்னை தீவுத்திடல்


நேரம்:
திங்கள் முதல் சனி வரை -  பகல் 3 மணி முதல் இரவு 10 மணி வரை.
ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் - காலை 11 மணி முதல் இரவு 10 மணி வரை.


1)சென்னைக்கு தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் இருந்தும் பேருந்துகளும், ரயில்களும், விமானங்களும் இயக்கப்படுகின்றன.


2)சென்னை வந்த பின்னர் மாநகர அரசுப் பேருந்துகள் தீவுத்திடலுக்கு இயக்கப்படுகின்றன.


கட்டணம்:
பெரியவர் - ரூ. 10
சிறியவர் - ரூ 5


மேலும் விபரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்.



Related Posts with Thumbnails

தமிழக சுற்றுலா

↑ Grab this Headline Animator