தமிழக அரசின் 36வது சுற்றுலாப் பொருட்காட்சி சென்னையில் நடைபெற்று வருகிறது. திசம்பர் 22ஆம் தேதி முதல் இந்த சுற்றுலா பொருட்காட்சியை தமிழக முதல்வர் தொடங்கி வைத்தார். இது வெற்றிகரமான 36வது சுற்றுலா -தொழில் பொருட்காட்சியாகும்.
இங்கு என்னதான் இருக்கிறது என்று கேட்கிறீர்களா?
இங்கு மத்திய மற்றும் மாநில அரசின் அரங்குகள், பல வகையான விளையாட்டுகள், உங்களை கவரும் வகையில் மீன் அருங்காட்சியகம்,
சாகச விளையாட்டுகள், உங்கள் பர்ஸை காலியாக்க வணிக வளாகம், உங்கள் வயிரை நிரப்ப ஓட்டல் தமிழ்நாடு, உங்கள் குடும்பத்தோடு பயணம் செய்ய சிறுவர் ரயில் என பல இருக்கிறது.
நீங்கள் அமர்நாத் செல்லவில்லையா? இந்த சுற்றுலா கண்காட்சிக்கு செல்லுங்கள் அமர்நாத் பனிலிங்கம் உங்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது.
கோ-கார்ட் விளையாட்டுகள், திரை இசை, நடனம், மெல்லிசை மற்றும் பல கலை நிகழ்ச்சிகளும் இங்கு உள்ளன.
நீங்களும் எடிசன் ஆகலாம். ஆம்! இங்கு உங்களுக்குள் இருக்கும் விஞ்ஞானியை கண்டுபிடிக்க, உங்கள் அறிவை ஊக்குவிக்க விஞ்ஞான தொழில் நுட்ப அரங்குகளும் உள்ளன. மேலும் பல போட்டிகளும் இங்கு நடத்தப்படுகின்றன.
இங்கு எப்படி செல்வது?
இடம்: சென்னை தீவுத்திடல்
நேரம்:
திங்கள் முதல் சனி வரை - பகல் 3 மணி முதல் இரவு 10 மணி வரை.
ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் - காலை 11 மணி முதல் இரவு 10 மணி வரை.
1)சென்னைக்கு தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் இருந்தும் பேருந்துகளும், ரயில்களும், விமானங்களும் இயக்கப்படுகின்றன.
2)சென்னை வந்த பின்னர் மாநகர அரசுப் பேருந்துகள் தீவுத்திடலுக்கு இயக்கப்படுகின்றன.
கட்டணம்:
பெரியவர் - ரூ. 10
சிறியவர் - ரூ 5
மேலும் விபரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்.
29.1.10
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment
நிறைகளும் குறைகளும் இங்கே!!