14.4.10

திருவள்ளுவர் சிலை - Thiruvalluvar Statue

வாசகர்கள் அனைவருக்கும் எனது இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.  இந்த சித்திரைத் திருநாளில் தமிழை நிலைநாட்டிய , தமிழுக்குப் பெருமை சேர்த்த வள்ளுவரைப் பற்றி இந்த பதிவை எழுதுவதில் நான் பெருமைகொள்கிறேன்.  அந்தப் புலவரை பெருமைப்படுத்த வங்காள விரிகுடாவும், இந்தியப் பெருங்கடலும், அரபிக் கடலும் சங்கமிக்கும் இந்தியாவின் தென்கோடி முனையான கன்னியாகுமரியில் சுனாமியையும் தாக்குப்பிடிக்கும் பலத்தோடு எழுப்பப்பட்ட 133 அடி உயர சிலையை உருவாக்கி தனக்கு பெருமை தேடிக்கொண்டார் தமிழக முதல்வர்.


எத்தனையோ வரலாற்று சிறப்புமிக்க புலவர்களின் வரலாற்றை நமது ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தாலும், தமிழுக்கு தன் இரண்டடி குறளால் புகழைத் தேடித்தந்த திருவள்ளுவரின் வரலாற்றை கண்டுபிடிக்கமுடியவில்லை. குத்துமதிப்பாக திருவள்ளுவர் வாழ்ந்த காலம் கி.மு 31ஆம் நூற்றாண்டு என கண்டறிந்துள்ளனர். இருந்தாலும் சிலர் கி.பி இரண்டாம் நூற்றாண்டு எனவும் சிலர் கூறுகின்றனர்.  இவர் எழுதிய திருக்குறள் அனைவருக்கும் பொருந்துவதால், இவர் எந்த சமயத்தைச் சார்ந்தவர் என்றும் கணிக்கமுடியவில்லை.  அவர் வரலாற்றை அறிய முடியவில்லை என்றாலும் அவரைப் பெருமைப்படுத்ததுவில் பல நாடுகளும் பங்கெடுத்துள்ளன, அதில் தமிழகம் முன்னோடியாக திகழ்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு - பாரதியார்


1, ஜனவரி, 2000 அன்று தற்போதைய தமிழக முதல்வர் கலைஞரின் யோசனையால் உருவாகிய திருவள்ளுவர் சிலை திறந்துவைக்கப்பட்டது. திருக்குறளின் 133 அதிகாரங்களை குறிக்கும் வகையில் 133 அடி உயரம் கொண்டது இந்த சிலை.  சிலையைத் தாங்கும் பீடம் மட்டும் 38 அடி, சிலை 95 அடி என மொத்தம் 133 அடி உயரம்.   இந்த 38 அடி உயர பீடம் அறத்துப்பாலின் 38 அதிகாரங்களையும், 95 அடி உயர் சிலை பொருட்பால் மற்றும் இன்பத்துப்பாலின் 95 அதிகாரங்களையும் குறிக்கிறது.  அதாவது அறத்தை அடித்தளமாக கொண்டே பொருளும் இன்பமும் அமையவேண்டும் என்ற வாழ்க்கைத் தத்துவத்தை உணர்த்தும் வகையில் இந்த சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.


1979 ஆம் ஆண்டு, அன்றைய பாரதப் பிரதமர் மொராஜி தேசாயால் அடிக்கல் நாட்டப்பட்டு பல அரசியல் பிரச்சனைகளால் தடைபட்ட கட்டுமானப் பணி 1990ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்கப்பட்டு 5000க்கும் மேற்பட்ட சிற்பக்கலைஞர்களால் தமிழகத்தின் மிகச்சிறந்த கணபதி ஸ்தபதியின் மேற்பார்வையில் கட்டுமானப்பணி தொடங்கப்பட்டு 1999ஆம் நிறைவு பெற்றது. இதற்காக சிறுதாமூர் , பட்டுமலைக்குப்பம், அம்பாசமுத்திரம் போன்ற பகுதியில் உள்ள மலைகளில் இருந்து கற்கள் எடுத்துவரப்பட்டு சிலை உருவாக்கப்பட்டது.  இந்த சிலையின் மொத்த எடை 7000 டன்.  தமிழகத்தைப் பொறுத்தவரை கோயில்கள், சிலைகள் போன்றவறை என்றுமே பெரிதாக, பிரமாண்டமாக உருவாக்கப்படுவது உண்டு. அதைப் போலவே திருவள்ளுவர் சிலையும் முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமாரியில் கம்பீரத்துடன் பிரமாண்டமாய் காட்சியளிக்கிறது. நடுக்கடலில் ஒரு சிறிய தீவில் இந்த சிலை அமைந்துள்ளமையால் இந்த சிலையை அருகில் சென்று காண சுற்றுலாத் துறையின் மூலம் படகுகள் இயக்கப்படுகின்றன. பல நாட்கள் வானிலை மாற்றங்களால் படகு போக்குவரத்து நிறுத்தப்படுவதும் உண்டு. சில நாட்களுக்கு முன் கூட ஊழியர்களின் போரட்டத்தால் நிறுத்தப்பட்டது.


வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே - பாரதிதாசன்


கணபதி ஸ்தபதியின் திறமையாலும் அனுபவத்தாலும் சிலையின் இடுப்பு பகுதியில் உள்ள சிறிய வலைவு மிகச் சிறப்பாக செதுக்கப்பட்டுள்ளது. மேலும் எத்தகைய பூகம்பம் ஏற்பட்டாலும் தாங்கும் வகையில் செதுக்கப்பட்டமையால் சுனாமியின் தாக்கத்தையும் எதிர்த்து இன்று வரை  நிலையாய் இருக்கிறது. இந்த சிலையை நீங்களும் கண்டு களிக்கலாமே.  (சிலையின் பீடம் உயரம் கூட இருக்கமாட்டீர்கள்...)


எப்படி செல்வது?
1)கன்னியாகுமரிக்கு தமிழகத்தின் பல இடங்களில் இருந்து பேருந்துகள் உண்டு.
2)கன்னியாகுமரியில் ரயில் நிலையம் உண்டு. மேலும் விபரங்கள்
3)அருகில் உள்ள விமான நிலையம் - திருவனந்தபுரம் 80 கி.மீ தொலைவில்.


அங்கு சென்ற பின் சுற்றுலாத் துறையின் படகுகள் மூலம் சிலைக்குச் செல்லலாம்.


நேரம்: காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை.


.

4 comments:

ஸ்ரீ.... said...

மிகவும் பயனுள்ள இடுகை. தமிழகத்தின் பல பகுதிகளைக் குறித்த விரிவான தகவல்களுக்கு மிக்க நன்றி. புகைப்படங்களை இன்னும் அதிகமாக இணைக்கலாமே!

ஸ்ரீ....

Anonymous said...

very nice massage

karanayil madom said...

very help full for me to find good place ..keep going

Ramachandran said...

Karanayil madom is one of the oldest Vishnumaya Kuttichathan Maha manthrikam temples in Kerala. Located in the beautiful village of Ettuamana, Karanayil Madom is known for its powerful Vishnmaya deity and takes pride in the specialty of rituals conducted here to solve the problems affecting your mind and body.

Post a Comment

நிறைகளும் குறைகளும் இங்கே!!

Related Posts with Thumbnails

தமிழக சுற்றுலா

↑ Grab this Headline Animator