ஏலகிரியின் மொத்த பரப்பளவு 30 சதுர கிலோமீட்டர். எனவே ஏலகிரியில் சுற்றிபார்ப்பதற்கான இடங்களும் குறைவு, இருந்தாலும் மலையேற்ற பயிற்சிக்கு சிறந்த இடம் ஏலகிரி.
பூங்கானூர் ஏரி:
இந்த ஏரி செயற்கையாக உருவாக்கப்பட்டது. இதன் மொத்த பரப்பளவு 56.7 சதுர மீட்டர். இந்த ஏரியில் சுற்றுலாத் துறையின் படகுகள் மூலம் படகு சவாரி செய்யலாம். ஏரியின் நடுவே செயற்கை நீருற்றும், ஏரியின் அருகே குழந்தைகள் பூங்காவும் உள்ளன.
Lake |
Park |
பூங்கானூர் ஏரியின் அருகே இந்த அரசு மூலிகை பண்ணை அமைந்துள்ளது. இங்கு ஏராளமான சித்த மற்றும் ஆயுர்வேத மூலிகைகள் கிடைக்கும். மேலும் ஏலகிரியில் உள்ள அரசு பழ பண்ணையில் மலை பழங்கள் கிடைக்கும்.
வேலவன் கோவில்:
இந்த கோவிலின் முக்கிய தெய்வமாக விளங்குவபவர் முருகன். சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் இங்கு மிகப்பெரிய கடோத்கஜன் சிலையும் உள்ளது. மேலும் இங்கிருந்து ஏலகிரியின் இயற்கை அழகை கண்டுகளிக்கலாம். இந்த கோவிலில் ஆடி மாதம் திருவிழா நடைபெறும்.
Velavan Temple |
ஏலகிரி செல்லும் வழியில் காட் ரோட்டில் அமைந்துள்ளது இந்த தொலைநோக்கி இல்லம். ஏலகிரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் ஏலகிரியின் அழகை இங்கிருந்து காணலாம்.
ஜலகம்பாறை நீர்வீழ்ச்சி:
ஏலகிரி வழியாக பாயும் அத்தாறு ஆறு இங்கு நீர்வீழ்ச்சியாக பாய்கிறது. இந்த நீர்வீழ்ச்சியின் உயரம் 30 மீ. இந்த அருவிக்கு நேர்வழி இருந்தாலும் பலநேரங்களில் அந்த வழி மூடியே இருப்பதால், நிலவூர் கிராமத்தில் இருந்து மலையில் 5 கி.மீ நடந்தால் இந்த நீர்வீழ்ச்சியை அடையலாம். இந்த அருவிக்கு அருகே சிவலிங்கம் வடிவில் ஒரு கோவிலும் உள்ளது. இந்த கோவிலின் முக்கிய கடவுளாக முருகப்பெருமானை வழிபடுகின்றனர்.
மூலிகை மரங்கள் அடர்ந்த காட்டின் நடுவே இந்த நீர்வீழ்ச்சி அமைந்துள்ளதால் இந்த நீர்வீழ்ச்சியில் குளிப்பது பல நோய்களை குணப்படுத்தும் என்று நம்பப்படுகிறது.
வைனு பொப்பு வானிலை ஆய்வுக்கூடம்:(Vainu poppu solar observatory)
ஏலகிரியில் இருந்து 25 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இந்த ஆய்வுக்கூடம். இந்த மிகப்பெரிய ஆய்வுக்கூடம் கவலூர் என்னும் இடத்தில் உள்ளது. இந்த ஆய்வுக்கூடத்தை சனிக்கிழமைகளில் மாலை 4 மணி முதல் 6 மணி வரை காணலாம்.
விழாக்கள் - கோடை காலத்தில் தமிழக சுற்றுலாத் துறையின் சார்பில் கோடை விழா நடத்தப்படும்.
எப்படி செல்வது?
- ஏலகிரிக்கு வேலூர், சென்னை, ஜோலார்பேட், வாணியம்பாடி, திருப்பத்தூர் போன்ற இடங்களில் இருந்து பேருந்துகள் உண்டு.
- அருகில் உள்ள ரயில் நிலையம் - ஜோலார்பேட், 19 கி.மீ தொலைவில்.
- அருகில் உள்ள விமான நிலையம் - பெங்களூர், 160 கி.மீ தொலைவில்.
5 comments:
படங்கள் அருமை....
நல்லா இருக்கு , வாழ்த்துக்கள்.
மிக இளைஞரான நீங்கள் நல்ல பொழுது போக்காக இந்த ப்ளாகை தேர்ந்தேடுதுள்ளீர்கள். தமிழகத்தின் பல இடங்கள் பற்றி எழுதுவது மிக நன்று. தொடருங்கள். வாழ்த்துகள்
தமில்ழகத்தில் உள்ள அணைத்து சுற்றுலா தளங்களையும் பற்றி விரிவாகவும், தெளிவாகவும், சுவாரசியம் குறையாமல் தகவல் அளிக்கும், உன் சேவைக்கு எனது வாழுத்துக்கள்.
- இப்படிக்கு
டான் ஒப் SSRV
vellore la eruthu evalavu thruram?
elagri il vasikum makalin ennikai?
etha na ooru eruku?
what are the agriculture crop & horticulture crop cultivated?
ariculture area evalavu?
horticulture area evalavu?
entha kelvigaluku vidai kuravum by joalrpettai
Post a Comment
நிறைகளும் குறைகளும் இங்கே!!