20.2.10

கங்கை கொண்ட சோழபுரம் - Gangai Konda Cholapuram

இன்று நாம் சோழர்கள் எழுப்பிய கங்கை கொண்ட சோழபுரத்தைப் பற்றி பார்க்கப் போகிறோம்.  கங்கை கொண்ட சோழபுரம் தமிழகத்தின் அரியலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. பதினொன்றாம் நூற்றாண்டில் முதலாம் ராஜேந்திர சோழன் இதை தனது தலைநகரமாக ஆக்கினார்.


தஞ்சைப் பெரிய கோயில் கட்டி முடிக்கப்பட்டு இருபது ஆண்டுகளில் இந்தக் கோயிலும் கட்டி முடிக்கப்பட்டது. தஞ்சைப் பெரிய கோவிலை பற்றி மேலும் அறிந்து கொள்ள எனது முந்தைய இடுகையைப் பார்க்கவும்.



தஞ்சையில் ஆண்மையின் வீரம் தெரிவது போல கங்கை கொண்ட சோழபுரத்தில் பெண்மையின் அழகும் மென்மையும் வெளிப்படுகிறது என்றே கூறலாம். ஒரு பெண் எப்படி மற்றவர்களை கவர்கிறாளோ அது போலவே இந்தக் கோவிலும் அமைக்கப்பட்டிருக்கிறது.  அது எப்படி என நீங்கள் கேட்கலாம். அதாவது கோயில் விமான அமைப்பில் நேர் கோடுகள் இல்லாமல் நெளிவுகள் இருக்கின்றன.  தஞ்சையை விட இந்தக் கோவில் மிகவும் பொலிவுடன் விளங்குகிறது என்பதும் இதற்கு ஒரு காரணம்.


இந்தக் கோயிலின் முகப்பு பகுதி மஹாதுவார் என்று அழைக்கப்படுகிறது. விமானத்தின் உயரம் 182 அடி. ஆனால் தஞ்சை விமானத்தைவிட சிறியது. விமானத்தில் எட்டு நிலைகள் இருக்கின்றன.  கோபுரத்தின் பல இடங்களில் நெளிவுக் கோடுகள் போடப்பட்டிருப்பது இந்தக் கோவிலின் பெண்மையை குறிக்கிறது.  இந்தக் கோவிலின் மூலம் பருவம் அடைந்த பெண்ணின் அழகை சோழர்களின் கலைத்திறமையின் மூலம் அறியலாம்.


இன்னும் சொல்ல வேண்டும் என்றால் தஞ்சை பெரிய கோவிலைப் போல் கட்ட எண்ணி உருவாக்கப்பட்டதுதான் இந்தக் கோவில்.  கடைசியில் பல மாற்றங்களோடும் பெண்மையோடும் உருவானதே இந்தக் கலைக் கோவில்.  கற்சிலைகளே இந்தக் கோவிலின் பொக்கிஷமாகும்.  பல பேர் இந்தக் கோவிலைக் கொள்ளையடித்ததாக கூறினாலும் சோழர்களின் பெருமையை நிலைநாட்ட கற்சிலைகள் கோவிலில் அணிவகுத்து நிற்கின்றன. இதில் குறிப்பிட்டு கூறவேண்டியது சிங்க கேணியும், ராஜராஜ சோழனுக்கு சிவனும் பார்வதியும் முடிசூட்டுவதும், நாட்டியமாடும் விநாயகரும், அர்த்தநாரிஸ்வரரும் ஆகும்.  இங்கு இருக்கும் கேணியின் மேல் பகுதி சிங்க வடிவில் அமைக்கப்பட்டுள்ளது அதுவே சிங்க கேணியாகும். தஞ்சையைப் போன்று பெரிய நந்தியும் இங்கு உண்டு.


இந்தக் கோவிலின் சிவலிங்கம் 4 மீ உயரம் உள்ளது. அரச குடும்பத்தினர் வழிபடுவதற்காக தனி வழியும் உருவாக்கப்பட்டுள்ளது. சோழர்களின் வாழ்க்கை வரலாறே இந்தக் கோவிலில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்று கூறலாம். கோவிலில் பல இடங்களில் சோழர்களைப் பற்றிய அறிய தகவல்கள் இங்கு பொறிக்கப்பட்டிருக்கின்றன.  ஆயிரத்தில் ஒருவன் படத்தைப் பார்த்து சோழர்களைப் பற்றி அறிவதற்கு பதிலாக இங்கு சென்று அறிந்துகொள்ளுங்கள், அந்தப் படத்தில் இருப்பதை விட அதிக தகவல்களை தெரிந்துகொள்ளலாம். 


கட்டிடக்கலையும் சிற்பக்கலையும் பிரம்மாண்டமுமே இந்தக் கோவிலின் சிறப்பம்சம்.  அதை பாதுகாப்பது நமது கடமையும் கூட.  முடிந்தால் இங்கு சென்று வாருங்கள், கோவிலை தூய்மையாக வைத்திருக்க உதவுங்கள்.  
இங்கு செல்ல முடியவில்லை என்றால் பரவாயில்லை. பல பேருக்கு இந்த இடுகையைப் பற்றி தெரியப்படுத்துங்கள், அவர்கள் செல்லட்டும். கடைசியாக ஒன்று தஞ்சை ஆண்மைக்கு அடையாளம் கங்கை கொண்ட சோழபுரம் பெண்மைக்கு அடையாளம்.


எப்படி செல்வது?
1)தமிழகத்தின் பல இடங்களில் இருந்து அரியலூருக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன


2)அரியலூரில் ரயில் நிலையமும் உள்ளது மேலும் விபரங்கள்

3)அருகில் உள்ள விமான நிலையம் - திருச்சி 64 கி.மீ தொலைவில்.


வாசகர் விருப்பம் பகுதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய இடத்தைப் பற்றி என்னிடம் கேளுங்கள். 


.

8 comments:

அன்புடன் நான் said...

நல்ல முயற்சி பாராட்டுக்கள்.... நானும் கங்கை கொண்ட சோழபுரத்தின் எழிலை கண்டு வியந்திருக்கிறேன்.....

புலவன் புலிகேசி said...

நண்பரே எனக்குப் பிடித்த இடம்...நான் பட்டித்த கல்லூரிக்கருகிலிருக்கும் இடம்..அடிக்கடி சென்ற இடம்..நன்றி நண்பா

DREAMER said...

வெகுநாளாக செல்ல வேண்டும் என்ற திட்டம் சமீபத்தில்தான் நிறைவேறியது.

நல்ல தகவல்கள்... நல்ல பகிர்வு...

-
ட்ரீமர்

அண்ணாமலையான் said...

நண்பரே நல்ல பகிர்வுக்கு நன்றி.. தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்...

வேலன். said...

நல்ல பதிவு நண்பரே...வாழ்க வளமுடன்,வேலன்.

nedu said...

fantastic info

Karthikeyan Rajendran said...

நல்ல அறுமையா தெளிவா சொன்னீங்க நன்றி!!

ganesh said...

அற்புதம்

Post a Comment

நிறைகளும் குறைகளும் இங்கே!!

Related Posts with Thumbnails

தமிழக சுற்றுலா

↑ Grab this Headline Animator