மதுரையில் உள்ள திருமலை நாயக்கர் மஹாலைப் பற்றி இன்று பார்க்கலாம். மதுரை, மீனாட்சிக்கு மட்டும் பெயர் போனதல்ல! நாயக்கர் மஹாலுக்கும் பெயர் போனதுதான். 17ஆம் நூற்றாண்டில் மதுரையை ஆண்ட நாயக்கர் மன்னரால் கி.பி.1636 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. ஒரு இத்தாலிய கட்டிடக் கலைஞரால் இஸ்லாமிய, திராவிட, ஐரோப்பிய கட்டிடக் கலைகளை பின்பற்றி கட்டப்பட்டுள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை அறிந்திராதவர் எவரும் இல்லை என நினைக்கிறேன். அக்கோவிலில் இருந்து 1.5 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இந்த மஹால். உள்ளே செல்லும்போது நீங்கள் 3700 சதுர கி.மீ பரப்பளவுடன் கூடிய மஹாலின் மத்தியில் அமைந்துள்ள மைதானம் போன்ற அமைப்பை காண முடியும். அதை சுற்றிலும் வட்ட வடிவில் பிரமாண்டமான தூண்கள் மஹாலை தூக்கி நிறுத்துகின்றன. தற்போது அந்த இடம் பூங்காவாக மாறியுள்ளது.
இந்த மஹால் இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒன்று சொர்க்க விலாசம் மற்றொன்று ரங்க விலாசம். இதில் சொர்க்க விலாசம் அரசவையாக பயன்படுத்தப்பட்டது. அனைத்து கட்டிடங்களும் இந்த இரண்டு பகுதிகளுக்குள் அடங்கிவிடும். மஹாலின் சிறப்பம்சமே அங்கு இருக்கும் பிரமாண்ட தூண்கள். பல தூண்களை நீங்கள் என்ன நினைத்தாலும் கட்டிப்பிடிக்க முடியாது, அவ்வளவு பெரிய தூண்கள். (என்னே நாயக்கரின் கட்டிடக்கலை). அந்த காலங்களில் வசதிகள் இல்லாத நிலையிலும் நமது மன்னர்கள் பிரமாண்டத்தையே விரும்பினர் என்பதற்கு இதுவே நல்ல எடுத்துக்காட்டாகும். ஆனால் நாமோ இன்று வசதிகள் இருந்தும் சிறிய கட்டிடங்களை எழுப்பிவருகிறோம்.
இந்த மஹால் முழுவதும் செங்கல் போன்ற கற்கலால் கட்டப்பட்டது. மொத்த மஹாலும் சுண்ணாம்பு மற்றும் முட்டையின் வெள்ளைக் கருவை கலந்து பூசப்பட்டுள்ளது. இந்த மஹாலில் மொத்தம் 248 தூண்கள் உள்ளன. ஒவ்வொன்றொன்றும் 58 அடி நீளமும் 5 அடி விட்டமும் கொண்டது. தற்போது உள்ள கட்டிடத்தை விட 4 மடங்கு பெரிதாக கட்டபட்டது இந்த மஹால் என்று ஆராய்ச்சி கூறுகிறது.
தற்போது தமிழக அரசின் தொல்பொருள் ஆராய்ச்சி துறையின் கீழ் இந்த மஹால் இயங்குகிறது. தினமும் கண்கவர் ஒளி மற்றும் ஒலிக் காட்சிகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நடைபெறுகிறது. முக்கியமாக சிலப்பதிகாரத்தை பற்றி இந்த காட்சிகள் நடத்தப்படுகின்றன. இந்த மஹாலைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள மஹாலுக்கே சென்று வாருங்கள்.
எப்படி செல்வது என்றுதானே கேட்கீறீர்கள்?
மதுரைக்கு செல்ல வழி சொல்ல வேண்டுமா என்ன? இருந்தாலும் சொல்கிறேன்.
1) தமிழகத்தின் பல இடங்களில் இருந்து மதுரைக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
2)மதுரையில் ரயில் நிலையம் உள்ளது. மேலும் விபரங்கள்
3)மதுரையில் விமான நிலையமும் உள்ளது.
குறிப்பு: மீனாட்சி அம்மன் கோவிலில் இருந்து 1.5 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
கட்டணம்:
உள்நுழைய : ரூ.1
ஒளி மற்றும் ஒலிக் காட்சி.
பெரியவர் : ரூ.10
சிறுவர் : ரூ.5
நேரம்:
காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மற்றும்
மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை.
ஒளி மற்றும் ஒலிக் காட்சி.
தமிழில் இரவு 8.15 மணிக்கு
ஆங்கிலத்தில் இரவு 6.45 மணிக்கு
.
18.2.10
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
ஒவ்வரு இடத்தை பற்றி சிறப்பாக எழுதியுள்ளிர்கள்..அங்கு போய் எந்த லாட்ஜ் கலீல் தங்கலாம் ...வாடகை சுமாராக எவ்வளவு இருக்கும் என்ற விபரங்கள் தந்தாள் இன்னும் சிறப்பாக இருக்கும்..
Post a Comment
நிறைகளும் குறைகளும் இங்கே!!